என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சி செயலர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை
    X

    மீஞ்சூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சி செயலர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை

    • நம்ம ஊரு சூப்பர் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் சுகாதார திட்டம் குறித்து கேட்டறியப்பட்டது.
    • கிராமங்களில் முழுவதுமாக குப்பைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் மொத்தம் 55 ஊராட்சிகள் உள்ளன. இந்த நிலையில் அனைத்து ஊராட்சிகளின் செயல்பாடுகள் குறித்து ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களிடையே ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள் குறித்தும் முடிக்கப்பட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் சுகாதார திட்டம் குறித்து கேட்டறியப்பட்டது.

    அப்போது கிராமங்களில் சுகாதாரதிட்டங்கள் முழு வீச்சில் முடிக்கப்பட வேண்டும் எனவும் வீடுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து எடுக்கப்பட வேண்டும், கிராமங்களில் முழுவதுமாக குப்பைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட செயற்பொறியாளர் ராஜவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன், ஒன்றிய பொறியாளர் யாஸ்மின் மற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×