என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்- சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
- செவ்வாய்பேட்டை போலீசார் ஆனந்தபாபு, வினோத்குமார், ரவி ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- செவ்வாப்பேட்டை போலீசார் 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் எதிரே செவ்வாய்பேட்டை போலீசார் ஆனந்தபாபு, வினோத்குமார், ரவி ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசிய அவர்கள் திடீரென போலீஸ்காரர்களை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் தண்ணீர் குளம் பகுதியைச் சேர்ந்த ஆதித்யன், ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பது தெரிய வந்தது. இதில் ஆதித்யன் ஆந்திர மாநில சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து செவ்வாப்பேட்டை போலீசார் 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Next Story






