என் மலர்
திருப்பத்தூர்
வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் நடவடிக்கை
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குப்பட்ட நாய்க்கனூர் ஊராட்சியில் உள்ள கிராம பகுதிகளில் வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகருக்கு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் மேலா திருப்பதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி, மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தேசிய உணவு திட்டத்தின் ஆலோசகர் வாசுதேவரெட்டி. ஆலங்காயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புவிதவள்ளி, வேளாண்மை அலுவவர் சோபனா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் துணைத் தலைவர் தமிழ்செல்வி ஜோதிலிங்கம் ஆகியோர் நன்றி கூறினார்.
- மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
- உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்பு
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணையத்தின் ரூ.3.கோடி மதிப்பீட்டிலான சிறு விளையாட்டு அரங்கத்தை அமைக்க முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் எம்.எல். ஏககள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் வரவேற்று மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஒன்றியக் குழுத் தலைவர் சங்கிதாபாரி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், திமுக ஒன்றிய அவைத் தலைவர் எஸ்.பழனி, ஒன்றிய கவுன்சிலர் ப்ரித்தாபழனி, திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி.எஸ்.கார்த்திக், உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- பொது மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காணொளி காட்சி
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ. ராஜிவ் தலைமையில் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அரசு அலுவலகங்களில் கையூட்டு பெறும்போது பொது மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காணொளி காட்சி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் நகராட்சி ஆணையாளர் ஜி. பழனி, நகராட்சி பொறியாளர் பி. சங்கர், மேலாளர் இளவரசன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பெரியாங்கு ப்பத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி குணவதி (வயது 52) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் குணவதி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த குணவதியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணவதி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து குணவதி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காயமடைந்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதி
- கைதானவர்களை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த காரப்பட்டு அபிகிரி பட்டறை ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). கதவாளம் பகுதியில் பாஸ்புட், டிபன் கடை நடத்தி வருகிறார்.
கதவாளம் பகுதியை சேர்ந்த ராஜு (21), அஜித் குமார் (27) என்பவர்கள் சுபாஷ் கடைக்கு சாப்பிடுவதற்காக நேற்று முன்தினம் இரவு வந்தனர்.
அப்போது சுபாஷிடம் ரைசை ஆர்டர் செய்தனர். ரைஸ் வருவதற்கு சிறிது நேரம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜூ மற்றும் அஜித் ஆகியோர் சுபாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவரை சரமாரியாக தாக்கி கடாயில் இருந்த கொதிக்கும் எண்ணெய்யை தூக்கி சுபாஷ் மீது ஊற்றினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து சுபாஷ் உமராபாத் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜி மற்றும் அஜித்தை கைது செய்தனர். மேலும் கைதான வாலிபர்களை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- ஆலங்காயம் அருகே கிராம சபை கூட்டத்தில் மோதல்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுதாகர் என்பவர் கோரிக்கை மனு வழங்கினார்.
அதில் தி.மு.க. பிரமுகர் ஞானம் என்பவர் தன்னுடைய தங்கையின் பெயரில் பணிதள பொறுப்பாளராக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்வதால் அவரை மாற்றி, வேறு ஒருவரை புதியதாக நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கோரிக்கை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் ஞானம் மற்றும் சுதாகர் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம், கடும் மோதல் ஏற்பட்டது.இதை தொடர்ந்து 2 பேரும் வாணியம்பாடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இரு தரப்பினரும் ஆலங்காயம் போலீசில் தனிதனியாக புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் தி.மு.க பிரமுகர் ஞானம் கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுதாகர் (வயது 40), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (35), பார்த்திபன் (40), திருப்பதி (32) ஆகிய 4 பேர் மீதும் ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. க.தேவராஜி தொடங்கி வைத்தார்.
நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து
இதில் எம்.எல்.ஏ.க்கள் அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், ஆலங்காயம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தாமோதிரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் வி.வி.கிரிராஜ், ஒன்றிய அவைத் தலைவர் எஸ்.பழனி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி.எஸ்.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் தகவல்
- ‘நடப்போம் நலம் பெறுவோம்’ எனும் திட்டத்தை சட்டப்பேரவையில் அறிமுகம்
திருப்பத்தூர்:
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ்தலை நடைமுறைப்படுத்தும் வகையில், 'நடப்போம் நலம் பெறுவோம்' எனும் திட்டத்தை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தினார்.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சியை மேற்கொள்ள நடைபாதைகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தை முதல்- அமைச்சர் நாளை 4-ந் தேதி காலை 6 மணியளவில் தொடங்கி வைக்கிறார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நடைப்பயிற்சி நடைபெறஉள்ளது.
அடிப்படை வசதிகள்
இது குறித்து திருப்பத்தூர் கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் கூறியதாவது:-
கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கும் 8 கிலோமீட்டர் நடைப்பயிற்சி தூயநெஞ்சககல்லூரி மற்றும் பாச்சல் பத்மம் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக அச்சமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலை சென்று, பாச்சல் வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலகத்திலேயே முடிவடைகிறது. அந்த வழித்தடத்தில் குடிநீர், கழிவறை, அமருவதற்கு சாய்வு நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஞானம், சுதாகரை மிரட்டும் தோனியில் அவதூறாக பேசியதால் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
- படுகாயம் அடைந்த 2 பேரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில் அதே பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுதாகர் என்பவர் கோரிக்கை மனு வழங்கினார். அதில் தி.மு.க. பிரமுகர் ஞானம் என்பவர் தன்னுடைய தங்கையின் பெயரில் பணிதள பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
அவரை மாற்றி, வேறு ஒருவரை புதியதாக நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த கோரிக்கை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஞானம் மற்றும் சுதாகர் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஞானம், சுதாகரை மிரட்டும் தோனியில் அவதூறாக பேசியதால் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் அவர்கள் தனித்தனியாக ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மினி லாரி வைத்து ஏற்றி சென்றார்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தாக்(வயது 28) இவர் அதே பகுதியில் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை கடைக்கு வெளியே சாமான்களை வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது ரூ.6 ஆயிரம் மதிப்பிலான சமையல் பாத்திரங்கள் மாயமானது.
இதனால் அதிர்ச்சியடைந்த முகமது முஸ்தாக் அங்கு விசாரித்த போது சமையல் பாத்திரங்களை மில்லத் நகர் பகுதியை சேர்ந்த நதீம் என்பர் மினி லாரி வைத்து ஏற்றி சென்றது தெரியவந்தது.
இதை தொடர்ந்து முகமது முஸ்தாக் வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு வழக்கு பதிவு செய்து நதீமை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சமையல் பாத்திரங்களை பறிமுதல் செய்து செய்தனர்.
- குப்பைகளை எரித்த போது பரிதாபம்
- அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியா ங்குப்பத்தை சேர்ந்தவர் மார்கன் (வயது 80). இவரது வீட்டின் அருகே ஏராளமான குப்பைகள் இருந்தது.
அந்த குப்பைகள் காற்றில் பறந்தது. நேற்று மாலை சேகரித்து குவியலாக வைத்தார். பின்னர் தீ மூட்டி குப்பைகளை எரித்தார். அப்போது மார்கன் அணிந்திருந்த வேட்டியின் மீது திடீரென தீப்பொறி வேகமாக எரிய தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மார்கன் மீது எரிய தொடங்கிய தீயை அணைக்க முயன்றனர். இதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக மார்கன் இறந்தார்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மார்கன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
கோயம்புத்தூர், சாமய்யர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 37), தனியார் கம்பெனி காசாளர். இவரது மனைவி பிரேமலதா (30). தம்பதியினருக்கு 5 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் செந்தில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஏ.கஸ்பாவில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி கோவையில் இருந்து சென்னை சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
ஆம்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரப்பிசாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் செந்தில் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜோலா ர்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






