டிபன் கடைக்காரர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய வாலிபர்கள்

காயமடைந்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதி கைதானவர்களை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
டிபன் கடைக்காரர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய வாலிபர்கள்
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த காரப்பட்டு அபிகிரி பட்டறை ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). கதவாளம் பகுதியில் பாஸ்புட், டிபன் கடை நடத்தி வருகிறார்.

கதவாளம் பகுதியை சேர்ந்த ராஜு (21), அஜித் குமார் (27) என்பவர்கள் சுபாஷ் கடைக்கு சாப்பிடுவதற்காக நேற்று முன்தினம் இரவு வந்தனர்.

அப்போது சுபாஷிடம் ரைசை ஆர்டர் செய்தனர். ரைஸ் வருவதற்கு சிறிது நேரம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜூ மற்றும் அஜித் ஆகியோர் சுபாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவரை சரமாரியாக தாக்கி கடாயில் இருந்த கொதிக்கும் எண்ணெய்யை தூக்கி சுபாஷ் மீது ஊற்றினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து சுபாஷ் உமராபாத் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜி மற்றும் அஜித்தை கைது செய்தனர். மேலும் கைதான வாலிபர்களை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com