நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு

பொது மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காணொளி காட்சி ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ. ராஜிவ் தலைமையில் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அரசு அலுவலகங்களில் கையூட்டு பெறும்போது பொது மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காணொளி காட்சி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் நகராட்சி ஆணையாளர் ஜி. பழனி, நகராட்சி பொறியாளர் பி. சங்கர், மேலாளர் இளவரசன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com