என் மலர்
திருப்பத்தூர்
- அரசு பஸ்சை சிறை பிடித்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சரிவர குடிநீர் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் கத்தரியில் இருந்து நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் குவிந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- வாகன தணிக்கையின்போது சிக்கியது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கைக்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் இன்று காலை ஜோலார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.
அப்போது வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த டிப்பர் லாரியை மடக்கினர். போலீசாரை கண்டதும் டிரைவர், லாரியை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
போலீசார் லாரியை பரிசோதனை செய்தபோது, அதில் அனுமதியின்றி மண் கடத்தி வந்தது தெரிந்தது.
இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.
- தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்
- அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்
ஜோலார்பேட்டை:
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கலைமணி (வயது 36). இவரது மனைவி சத்தியா (32). இவர்களுக்கு லித்திக்ஷா (6) என்ற மகளும், நிவின் (3) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கலைமணி கிருஷ்ணகிரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது காரில் நேற்று இரவு சென்றார். காரை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் முருகன் ஓட்டினார்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் காரை ஓரமாக நிறுத்தினார். காரில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறினர். கண்ணிமைக்கும் நேரத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தொரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். முன்கூட்டியே சுதாரித்துக் கொண்டு காரில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருப்பத்தூர் எஸ்.பி.யிடம் புகார் மனு
- உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
இதில், திருப்பத்தூரைச் சேர்ந்த புரட்சி என்பவர் அளித்த மனுவில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பஸ்கள், கடைகள், வணிக வளாகங்களில் 10 ரூபாய்
நாணயங்களை வாங்க மறுக் கின்றனர். எனவே, 10 ரூபாய் நாணயங்களை அனைத்து இடங்களிலும் வாங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் எஸ்.பி. புஷ்பராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள் செந்தில் (திருப்பத்தூர்), சரவணன் (ஆம்பூர்), தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ரஜினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் முரளி (வயது 22), கூலி தொழிலாளி.
இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், முரளியை எச்சரிக்கை செய்தனர்.
இருப்பினும் முரளி அந்த சிறுமியை அடிக்கடி சந்தித்து பேச வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் அண்ணன் சந்தோஷ், முரளியை பலமுறை கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முரளி இன்று காலை தும்பேரிக்கு வந்தார்.
இதனைப் பார்த்த சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த முரளி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் அம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கி இருந்த சந்தோஷை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள தர்மபுரி மேம்பாலத்தின் கீழ் குப்பையில் உணவு பொருட்களை மர்ம கும்பல் வீசி சென்றுள்ளனர். அதில்,
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டுகள், கம்பெனி சிப்ஸ் வகைகள், டூத் பேஸ்ட், குளிர்பானங்கள் மற்றும் மளிகைப்பொ ருட்கள் ஏராளமான பாக்கெட்டுகள் கிடந்தன.
இதையறிந்த அப்பகுதி மக்கள் அவற்றை எடுத்து செல்ல அருகே சென்று பார்த்தனர். அப்போது, அவை அனைத்தும் காலாவதியானது என்பது தெரியவந்தது. எனவே,' அவற்றை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர்.
அவ்வழியாக செல்லும் குழந்தைகள் குப்பையில் வீசப்பட்டுள்ள அந்த உணவு பொருட்களை எடுத்து சாப்பிட வாய்ப்பு உள்ளது. இதன் காரண மாக அவர்களுக்கு உடல் நிலை பாதிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அவற்றை பார்வையிட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும், காலாவதியான உணவு பொருட்களை குப்பையில் வீசி சென்ற மர்ம கும்பலை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் சின்ன ஜங்கலாபுரத்தை சேர்ந்தவர் பாபு (வயது 64). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர்கள் இருவரும் பைக்கில் இறைச்சி வாங்குவதற்காக இன்று காலை கடைக்கு சென்றனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக சீனிவாசன் பிரேக் போட்டார். அப்போது பைக்கில் இருந்து நிலை தடுமாறி பாபு கீழே விழுந்தார். இதில் பாபுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொருட்கள் தீயில் கருகி நாசமானது
- தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் நேற்று மாலை பெய்த மழை காரணமாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் தயாநிதி என்பவரின் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்துள்ளது.
உடனடியாக அப்பகுதி மக்கள் வீட்டில் இருந்த வர்களை வெளியேற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த டிவி, மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசமானது.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் தகவல்
- முன்னணி நிறுவனங்கள் பங்குபெற உள்ளது
ஆம்பூர்:
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற் சித் துறையின் சார்பில் 100 சிறப்பு தனியார் துறைவேலை வாய்ப்பு முகாம் நடத்தவும், அதில் திருப்பத்தூர் மாவட் டத்திற்கு 3 முகாம் நடத்தவும் அரசு உத்தரவிட்டு இருந்தது.
அதன்பேரில் 2 வேலை வாய்ப்பு 'முகாம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. 3-வது தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஆம்பூர் இந்து மேல்நிலை ப்பள்ளியில் வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
இதில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது.
எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், 8-ம் வகுப்பு முதல் பட்டயப்ப டிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் முடித்த ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரி வித்துள்ளார்.
- நேருக்கு நேர் வேகமாக மோதியது
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு அருகே உள்ள கூவல்குட்டை பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்( வயது 28). இவர் தனது பைக்கில் ஆலங்காயம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது புலவர்பள்ளி ஏரிகரையில் எதிரே வந்த பைக் அரவிந்த் சென்ற பைக் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது.
பைக்கில் வந்த அர்விந்த் மற்றும் வினோத்(30) ஆகிய 2 பேரும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
உடனடியாக அப்பகுதி மக்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு மாற்றம் செய்யப்ப ட்டனர்.
இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து கொண்டு சாகசம் செய்துள்ளனர்.
- தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 வாலிபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் பட்டாசை பொருத்தி வெடித்து சாகசம் செய்தனர். இதனை வீடியோ எடுத்தனர். இது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
மேலும் அந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து கொண்டு சாகசம் செய்துள்ளனர். பைக்கில் முன்புறம் பட்டாசை பொருத்தி அதனை வெடிக்க செய்தனர்.
இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டு வீடியோ போடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- ஜெயிலில் அடைத்தனர்
- மாணவியை மீட்டு வேலூர் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் (வயது 22).
இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து புகாரின் பேரில் உமராபாத் போலீசார் முகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று போலீசார் முகேஷை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். மேலும் பள்ளி மாணவியை மீட்டு வேலூர் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.






