மண் கடத்திய லாரி பறிமுதல்

வாகன தணிக்கையின்போது சிக்கியது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மண் கடத்திய லாரி பறிமுதல்
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கைக்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் இன்று காலை ஜோலார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.

அப்போது வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த டிப்பர் லாரியை மடக்கினர். போலீசாரை கண்டதும் டிரைவர், லாரியை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

போலீசார் லாரியை பரிசோதனை செய்தபோது, அதில் அனுமதியின்றி மண் கடத்தி வந்தது தெரிந்தது.

இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com