என் மலர்
தேனி
- அரசு உதவிபெறும் கல்வி நிறுவனமான இந்த பள்ளி கடந்த 1981-ம் ஆண்டு முதல் தேவேந்திரகுல உறவின்முறை நிர்வாகத்தில் இருந்து வருகிறது.
- இந்த பள்ளிக்கு பட்டா வழங்கக்கோரி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் ஆலமரம் அருகே கடந்த 1955-ம் ஆண்டு திருவள்ளுவர் தொடக்கப்பள்ளி புறம்போக்கு நிலத்தில் தொடங்கப்பட்டது. அரசு உதவிபெறும் கல்வி நிறுவனமான இந்த பள்ளி கடந்த 1981-ம் ஆண்டு முதல் தேவேந்திரகுல உறவின்முறை நிர்வாகத்தில் இருந்து வருகிறது.
இந்த பள்ளிக்கு பட்டா வழங்கக்கோரி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ திருவள்ளுவர் தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் கோப்புகளை விரிவாக பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது சின்னமனூர் வி.ஏ.ஓ மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் உடனிருந்தனர்.
- பொதுமக்கள் கூறுகையில், கன்னியம்பட்டி மட்டுமல்லாது சின்னமனூர் சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
- இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடனேயே சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே கன்னியம்பட்டி நடுத்தெரு பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதில் ஒரு நாய்க்கு வெறிபிடித்து சாலையில் ஆவேசமாக ஓடியது.
அந்த பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ரியாசினி மற்றும் வெள்ளத்தாய் என்ற 70 வயது மூதாட்டி உள்பட 4 பேரை கடித்து குதறியது. இதனைதொடர்ந்து அவர்கள் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ரியாசினிக்கு காயம் பெரியஅளவில் இருந்ததால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கன்னியம்பட்டி மட்டுமல்லாது சின்னமனூர் சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடனேயே சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் ஆட்டோவில் பயணிக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது. தெருநாய்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
எனவே இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
- நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வழிகாட்டும் ஒரு அருமையான சிகிச்சை முறை. ஒவ்வொரு மருத்துவ முறைகளிலும் உள்ள தனித்துவம், அந்தந்த முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும்.
- இந்த ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையில், இந்திய மருத்துவமுறைகளில் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய முறைகளில் சிகிச்சைகள் வழங்கப்படும்.
தேனி:
தமிழக முதல்-அமைச்சர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா, மகாராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.
ஆயுர்வேத மருத்துவம் மிக பழமையானது. நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வழிகாட்டும் ஒரு அருமையான சிகிச்சை முறை. ஒவ்வொரு மருத்துவ முறைகளிலும் உள்ள தனித்துவம், அந்தந்த முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும். ஆயுர்வேத முறையில் அதிக அளவில் மூலிகைச் செடிகளை வைத்து மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கென மருத்துவமனை வளாகத்தில் மூலிகைத் தோட்டம் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையில், இந்திய மருத்துவமுறைகளில் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய முறைகளில் சிகிச்சைகள் வழங்கப்படும். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள ஆயுஷ் மருத்துவமனை ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் மூன்று தளங்களுடன், வெளிநோயாளர் பிரிவு, உள்நோயாளர் பிரிவுகளுடன் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 50 படுக்கைகளுடன் 35,198 சதுர அடி பரப்பில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனை கட்டிடத்தில் சித்த மருத்துவம் மற்றும் மருத்துவப் பிரிவுகளின் வெளிநோயாளர் பிரிவு, மூலம் பவுத்திரம், கட்டிகள் போன்றவற்றிற்கு செய்யப்படும் சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், பக்கவாதம் மறுவாழ்வு மையம், தெரபி மற்றும் தொக்கணம் அறை, மருந்தகம், அவசர சிகிச்சை அறை, ஆய்வறை, வர்ம சிகிச்சை, யோகா அக்குபஞ்சர் சிகிச்சை, மண் குளியல், சூரியக்குளியல், யோகா பயிற்சிக் கூடம், பெண்கள் இயற்கை மருத்துவ பிரிவு, கிரியா கூடம், உணவு விடுதி, கூட்டரங்கம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ பிரிவு போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திருநாவுக்கரசு, இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்பாபு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெறித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.
- தற்போது பெய்து வரும் மழையால் நீண்ட நாட்களுக்கு பிறகு வறண்டு கிடந்த சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்தின்றி காணப்பட்டது.
மேலும் வராகநதி, கொட்டக்குடி, மூலவைக யைாறு உள்ளிட்ட ஆறுகள் வறண்டு காணப்பட்டது. கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெறித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. வருசநாடு அருேக உள்ள சின்ன சுருளி அருவிக்கு மேகமலையில் மழை பெய்யும் போது தண்ணீர் வரத்து இருக்கும். தற்போது பெய்து வரும் மழையால் நீண்ட நாட்களுக்கு பிறகு வறண்டு கிடந்த சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு ள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மூலவைகையாற்றுக்கு நீர்வரத்து இல்லை. மழை தொடரும் பட்சத்தில் தண்ணீர் வரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.10 அடியாக உள்ளது. 199 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 47.41 அடியாக உள்ளது. 30 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்து திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.20 அடியாக உள்ளது. ஒரு கன அடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 3.6, கூடலூர் 1.2, சண்முகாநதி அணை 2, போடி 1.8, வைகை அணை 8.2, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 17, வீரபாண்டி 13.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- முதலாம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிள் மாயமானார்கள்.
- போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள கோட்டைப்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி மகள் கவுசல்யா(17). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல தயார்நிலையில் இருந்தார். சம்பவத்தன்று குடும்பத்தினர் அனைவரும் விஷேசத்திற்கு சென்றனர். மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது மகள் கவுசல்யாவை காண வில்லை. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
போடி அருகில் உள்ள ஜே.கே.பட்டி அய்யனார் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி(21). இவர் போடியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று டி.சி வாங்கி வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது தாய் அமிர்தவள்ளி போடி டவுன் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை ேதடி வருகின்றனர்.
- கடந்த பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்த போது அடக்க முயன்ற வர்களுடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட அண்ணன், தம்பியை அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சுரேஷ்கு மார் மகன் சந்துரு (19). இவரது வீட்டில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். கடந்த பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்த போது அடக்க முயன்ற சந்துரு, சந்தோஷ், கண்ணன், தினேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு வந்த மேற்படி கும்பல் ஜல்லிக்கட்டு மாட்டை இப்போது அவிழ்த்து விடு. அடக்கி காட்டுகிறோம் என தகராறு செய்தனர். இதனை தட்டிக்கேட்ட சந்துரு மற்றும் அவரது அண்ணன் லிவின்கு மாரை அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த 2 பேரும் பெரிய குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர்.
இதுகுறித்து தேவதா னப்பட்டி போலீஸ் நிலைய த்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்களை கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தேனி:
தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(63). இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். மீண்டும் திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.
பீரோவில் பார்த்தபோது 31 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). இவர் வெல்லம் வியாபாரம் பார்த்து வருகிறார். இவரது மகனும், மகளும் வெளிநாட்டில் உள்ளனர். ராமகிருஷ்ணன் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று அழகாபுரிக்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6.5 பவுன் தங்கநகை, 350 கிராம் வெள்ளிபொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்தும் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்களை கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் நடத்தப்படும் தொழிற்கடன் முகாமினை தொழில்முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
தேனி:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் நடத்தப்படும் தொழிற்கடன் முகாமினை தொழில்முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949ம் ஆண்டு முதல் இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சி முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும். தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
மேலும் இந்த நிறுவனம் கடனுதவிக்கு அப்பாற்பட்ட சேவைகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் கடந்த 21ந் தேதி முதல் அடுத்த மாதம் 1ந் தேதி வரை நடைபெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில் 35 சதவீதம் முதலீட்டு மானியம் மற்றும் 6சதவீதம் வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பினை மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பெற்று பயனடையுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- வெவ்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றபோது 3 பேரை பிடிபட்டனர்.
- அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தேனி:
தேனி போலீசார் காட்டுபத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற கம்பம் வடக்குப்பட்டியை சேர்ந்த யோக்கியன் (58) என்பவரை கைது செய்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோம்பை போலீசார் பண்ணைபுரம்-பல்லவராயன்பட்டி சாலை யில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற ஈஸ்வரன் (51) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டி ல்களை பறிமுதல் செய்த னர். வருசநாடு போலீசார் முறுக்கோடை பகுதியில் ரோந்து சென்றபோது மதுவிற்ற பாண்டி என்ப வரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- பிடிபட்ட நபர் வைத்திருந்த பையில் சோதனை நடத்தியபோது அதில் 11 கையெறி குண்டுகள் இருந்தது தெரிய வந்தது.
- தப்பி ஓடியவர் இவரது கூட்டாளி எனவும் தெரிய வந்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 வாலிபர்கள் பையுடன் சுற்றிக்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். இதனை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபர் வைத்திருந்த பையில் சோதனை நடத்தியபோது அதில் 11 கையெறி குண்டுகள் இருந்தது தெரிய வந்தது.
இதனை பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை விரட்ட வைத்திருந்ததாக அவர் கூறினார். பிடிபட்டவர் போடியை சேர்ந்த சடையன் (வயது40) என்பதும் தப்பி ஓடியவர் இவரது கூட்டாளி எனவும் தெரிய வந்தது. உண்மையில் இந்த கையெறி குண்டுகளை பன்றிகளை பிடிப்பதற்காக வைத்திருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக வைத்திருந்தாரா? என விசாரித்து வருகின்றனர்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து மீண்டும் குடும்ப நடத்த அழைத்து வந்தார்.
- அழகுசின்னு ராஜதானி போலீசில் சரண் அடைந்தார்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராயவேலூரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது37). இவரது மனைவி அழகுசின்னு (31). இவர்களுக்கு பிளஸ்-2 மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி 2 பேரும் கூலித்தொழில் செய்து வந்தனர்.
சண்முகவேல் குடிபழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியை தாக்கி ரகளையில் ஈடுபட்டார். இதனால் வேதனையடைந்த அழகுசின்னு கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து மீண்டும் குடும்ப நடத்த அழைத்து வந்தார். சில நாட்கள் அமைதியாக சென்ற நிலையில் மீண்டும் மது குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். பொறுத்து பொறுத்து பார்த்த அழகுசின்னு கணவரை திரும்பி தாக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவர் அருகில் இருந்த அரிவாளை எடுத்து சண்முகவேலை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அழகுசின்னு ராஜதானி போலீசில் சரண் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சண்முகவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் தொல்லை கொடுத்த கணவரை மனைவியே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சில மாதங்களுக்கு முன்பு விரிவாக்கப்பணிகள் நடைபெற்றது. அப்போது சென்டர்மீடியன் அமைக்க ப்பட்டு உயர்கோபுர மின்வி ளக்குகள் பொருத்தப்பட்டது.
- இதில் வட்டாட்சியர் அலுவ லகம் முதல் கொண்டம நாயக்கன்பட்டி வரை அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் எரிவதில்லை.
ஆண்டிபட்டி:
மதுரை-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விரிவாக்கப்பணிகள் நடைபெற்றது. அப்போது சென்டர்மீடியன் அமைக்க ப்பட்டு உயர்கோபுர மின்வி ளக்குகள் பொருத்தப்பட்டது.
இதில் வட்டாட்சியர் அலுவ லகம் முதல் கொண்டம நாயக்கன்பட்டி வரை அமைக்கப்பட்ட உயர்கோ புர மின்விளக்குகள் எரிவதில்லை.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த உயர்கோபுர மின்விளக்கு களை விரைவில் பயன்பா ட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






