என் மலர்
நீங்கள் தேடியது "Women's safety awareness"
- கம்பத்தில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது.
- விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நகர்பகுதியில் ஊர்வலமாக வந்தனர்.
கம்பம்:
கம்பத்தில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது. பேரணியை கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கம்பம் பள்ளத்தாக்கு ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நகர்பகுதியில் ஊர்வலமாக வந்தனர். ரோட்டரி கிளப் கம்பம் நகர தலைவர் டாக்டர் வேல்பாண்டியன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.






