என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school teacher died"

    • ராஜதானி கள்ளர்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
    • எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

    ஆண்டிபட்டி:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை சேர்ந்தவர் விஜய்பாபு (41). இவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ராஜதானி கள்ளர்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தேனி மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் விஜய்பாபு பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×