தேவதானப்பட்டியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோலிக்குண்டு விளையாடும் போது தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் ஏற்பட்டது. தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும் தெற்கு தெருவை சேர்ந்த பவித்ரன் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோலிக்குண்டு விளையாடும் போது தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று பவித்ரன் மற்றும் அவரது நண்பர்கள் மாரிமுத்து, வசந்த், ரிஷிக்கேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து கணேசனை கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.

படுகாயம் அடைந்த கணேசன் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ரன், வசந்த், ரிஷிக்கேஸ்வரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com