search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரண்மனைபுதூர் மற்றும் கொடுவிலார்பட்டி ஊராட்சிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    அரண்மனைபுதூர் மற்றும் கொடுவிலார்பட்டி ஊராட்சிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி, மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சி த்திட்ட ப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்திர விட்டார்.

    தேனி:

    தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அரண்ம னைபுதூர் பகுதியில், ரூ.301.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.18லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணி களையும், 15-வது நிதிக்குழு மானியம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகளையும்,

    கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளையும், ரூ.3.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமையலறை பணிகளையும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவர்கள் கழிப்பறை கட்டிடத்தினை யும் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆசிரியர்கள் கழிப்பறை கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வின்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி, மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கொடுவிலார்பட்டி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வரத்து வாய்க்கால் மற்றும் நீர் செறிவூட்டு குழி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வளர்ச்சி த்திட்ட ப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்திர விட்டார்.

    Next Story
    ×