என் மலர்
தேனி
- போடி முந்தல் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
- இறைச்சி மற்றும் காட்டு மாட்டை வேட்டையாடிய 2 பேரை கைதுசெய்தனர். மேலும் 2 துப்பாக்கிளை பறிமுதல் செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி முந்தல் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அங்குள்ள மருத்துவர் ஒருவரின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்தனர்.
வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் வேலை பார்த்த மாந்தோப்பு பகுதியில் சோதனை நடத்தினர்.
அங்கு 150 கிலோ காட்டு மாட்டின் இறைச்சி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை வேட்டையாடி அதனை இறைச்சியாக விற்பனை செய்ய அவர்கள் வைத்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் இறைச்சி மற்றும் காட்டு மாடை வேட்டையாட பயன்படுத்திய 2 துப்பாக்கிளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் குரங்கணியைச் சேர்ந்த சன்னாசி (54), போடியைச் சேர்ந்த பெருமாள் (40) என தெரிய வரவே அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கும் பணி தொடங்கியது.
- சில்வார்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தேவதானப்பட்டி:
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கும் பணி தொடங்கியது. தேனி மாவட்டம் சில்வார்பட்டி,
ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சில்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரேசன் கடை ஒன்றில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர் ஒருவருக்கு கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப டோக்கனை வழங்கினார்.
பின்னர் மகளிர் உரிமைத்தொகை பெறுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் வட்டாட்சியர் அர்ஜூனன், சில்வார்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், மண்டல துணை வட்டாட்சியர் ராஜாராம் மற்றும் கனகமணி பி.டி.ஓ. விஜயமாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சருத்துபட்டி அருகே வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.
- பலத்த காயமடைந்த வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
திருப்பூர் சாமுண்டிபுரத்ைத சேர்ந்தவர் மணிகண்டன் (வயது49). பழ வியாபாரம் செய்து வந்தார். கேரள மாநிலத்தில்இருந்து பழம் வாங்கி வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
மோட்டார் சைக்கிளில் கேரளாவில் இருந்து தேனி வழியாக திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்-தேனி பைபாபஸ் சாலையில் சருத்துபட்டி அருகே வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மணிகண்டன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து திருப்பூரில் உள்ள அவரது மகன் நவீனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பெரியகுளம் தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை வழங்கிட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேசொக்கநாதபுரம்:
தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் நலச்சங்கம், தேனி வைகை ஜவான் மற்றம் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மாவட்டம் முழுவதும் முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை வழங்கிட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்கு தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் அலுவலர்களுக்கு சங்க தலைவர் பவுன், செயலாளர் சிவபாண்டி, துணைச் செயலாளர் வரதராஜன், பொருளாளர் லட்சுமணன், செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், ரமேஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.
- மின் மோட்டார், வயர் மற்றும் பைக் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
சின்னமனூர்:
தேனி அருகே சின்னமனூர்- சுக்காங்கால்பட்டி சாலையில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். அவரது மனைவி விஜயலட்சுமி (வயது63). இவர்கள் சொந்தமாக விவசாய நிலம் மற்றும் தென்னந்தோப்பில் விவசாயம் செய்து வருகின்றனர்.
கோவிந்தராஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் விஜயலட்சுமி மட்டும் பண்ணை வீட்டில் தனியாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சீலப்பாலக்கோட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து (40). இவர் தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது மர்ம நபர்கள் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே சில்வார்பட்டி, நல்லகருப்பன் பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (48). இவரது வீட்டில் இருந்த மோட்டாரை தேவதானப்பட்டியை சேர்ந்த பிச்சைபாண்டி (46) என்பவர் திருடிச் சென்றார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிச்சை பாண்டியை கைது செய்தனர்.
- போலீசார் சின்ன தேவியம்மன் கண்மாய் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
- 5 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தெய்வக்கண்ணன் தலைமையிலான போலீசார் சின்ன தேவியம்மன் கண்மாய் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததும், இதனை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தேவாரம் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஸ்குமார் (37), சுகேந்திரன் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி கவிதாவை போலீசார் தேடி வருகின்றனர். சுகேந்திரன் மீது ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் கவிதா மீதும் கஞ்சா கடத்திய வழக்குகள் உள்ளது.
- டிஜிட்டல் பேனர் சரிந்து விழுந்ததில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
- சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த டிஜிட்டல் பேனரை அங்கி ருந்து அப்புறப்படுத்தினர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி பஸ் நிலையம் எதிரே தி.மு.க. இளைஞரணி சார்பில் டிஜிட்டல் பேனர் அனுமதி இல்லாமல் வைக்க ப்பட்டதாக கூறப்படுகிறது. ஆடி மாதம் என்பதால் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த 2 பேர் பைக்கில் சென்றனர். அப்போது டிஜிட்டல் பேனர் சரிந்து விழுந்ததில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த டிஜிட்டல் பேனரை அங்கி ருந்து அப்புறப்படுத்தினர்.
- பைப் லைனில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
- இதனால் இன்று அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடியாகும். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. மேலும் அணையின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அவர்களுக்கு உதவியாக துணைக்குழு அமைக்கப்பட்டு பருவமழையின்போது அணையின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர்.
தற்போது தென்மேற்கு பருவமழை அவ்வப்போது மட்டுமே பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 119.85 அடியாக உள்ளது. 613 கன அடி நீர் வருகிறது. அணையின் ஷட்டர் பகுதியில் இருந்து போர்பே டேம் சுரங்கப்பாதை மற்றும் அங்கிருந்து லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையம் வரை உள்ள பைப் லைனில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இதனால் இன்று அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
வைகை அணையின் நீர்மட்டம் 49.66 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.73 அடியாக உள்ளது. நீர் வரத்து மற்றும் திறப்பு இல்லை.
பெரியாறு 1.4, கூடலூர் 1.4, உத்தமபாளையம் 2, சண்முகாநதி அணை 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- அமர்நாத் குகை கோவிலில் இயற்கை பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியை சேர்ந்த 4 பேர் உள்பட21 தமிழக பக்தர்கள் சென்றனர்.
- தாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப உதவி செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
சின்னமனூர்:
ஜம்முகாஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலில் இயற்கை பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியை சேர்ந்த 4 பேர் உள்பட21 தமிழக பக்தர்கள் சென்றனர்.
அப்போது பனி மலையில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக சாலை துண்டிக்கப்பட்டு நடு வழியில் சிக்கி தவித்தனர். தமிழக அரசு மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் சம்மந்த ப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் உதவியுடன் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து புதுடெல்லி, சென்னை வழியாக தேனி திரும்பினர்.
தாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப உதவி செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவை உத்தமபாளையத்தை சேர்ந்த பாண்டி, அவரது மனைவி செல்வி, சின்னமனூரை சேர்ந்த செந்தில்குமார், ராஜாங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி கூறினர்.
- வாலிபர் போலீஸ் எனக்கூறி மூதாட்டி துணிப்பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போன், ரேசன் கார்டை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
- கண்காணிப்பு காமிரா பதிவுகளை சோதனையிட்டனர். அப்போது ஒரு வாலிபர் மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்றது பதிவாகி இருந்தது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்கட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா. மூதாட்டியான இவர் தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக போலீஸ் குடியிருப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போதுஅங்கு வந்த வாலிபர் தான் போலீஸ் என்றும் உங்கள் பையில் உள்ளதை சோதனையிட வேண்டும் என கூறினார். மேலும் மூதாட்டி துணிப்பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போன், ரேசன் கார்டை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார்அளிக்கப்ப ட்டது.
அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை சோதனையிட்டனர். அப்போது ஒரு வாலிபர் மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்றது பதிவாகி இருந்தது.
அதனை வைத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கைவரிசை காட்டிய வாலிபர் சிக்கினார். போலீசார் விசாரணையில் அவர் கோட்டூர் மண்டுகருப்பணசாமி கோவில் தெருவை சேர்ந்த விஷ்ணு என தெரிய வந்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து போலீசார் விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றி விட்டு அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
- மின்தடை ஏற்பட்டதால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடை ந்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கட மலைக்குண்டு, மயிலாடு ம்பாறை ஒன்றியத்து க்குட்பட்ட கடமலை, மயிலை, வருசநாடு, குமணன்தொழு, மூலக்கடை உள்ளிட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்க ளில் வாழை, தென்னை, பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலங்களுக்கு வருசநாடு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த டிரான்ஸ்பார்மர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வந்தது. இந்த டிரா ன்ஸ்பார்மர் பழமையானது என்பதாலும் அதிகப்படி யான வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் திறன் இல்லாமல் இருந்தது.
எனவே புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி வருச நாடு பகுதியில் துணைமின் நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.
இதனால் பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றி விட்டு அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்க ப்பட்டது. இதனால் மின் வினியோகம் தடை பட்டது.
எனவே வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடை ந்துள்ளனர். கடந்த காலங்களில் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் வயலில் ஈரப்பதம் தங்கி இருக்கும்.
தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்ப தால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய உடன் வறண்டு விடுகிறது. இதன் காரணமாக பயிர்கள் காய்ந்து காணப்படு கிறது. மேலும் சில நாட்கள் இதே நிலை தொடர்ந்தால் பயிர்கள் அனைத்தும் கருகும் நிலைக்கு தள்ள ப்படும். டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நிறை வடைந்து பயன்பாட்டுக்கு வந்தால்தான் மின் வினியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இப்பணி நிறைவடைய மேலும் சில நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர். மின் வாரிய அதிகாரிகள் வந்து பணியை பார்வையிட்டு சோதனை அடிப்படையில் இயக்கிய பிறகுதான் மின் வினியோகம் கொடுக்க ப்படும். இதனால் பயிர்கள் முற்றிலும் சேதடையும் என தெரிவித்துள்ளனர்.
எனவே பணியை விரைந்து முடித்து பயி ர்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது.
- தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து 301 கனஅடியில் இருந்து 614 கனஅடியாக உயர்ந்தது.
கூடலூர்:
கடந்த சில நாட்களாக முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது. இதனால் முதல்போக நெல்சாகுபடிக்கு முழுவதும் தண்ணீர் கிடைக்குமா என கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் எதிர்பார்த்தி ருந்தனர்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து 301 கனஅடியில் இருந்து 614 கனஅடியாக உயர்ந்தது. நீர்மட்டமும் 119.75 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 49.74 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.26 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 22, தேக்கடி 15.4, கூடலூர் 2.4, சண்முகா நதி அணை 2 மி.மீ மழை யளவு பதிவாகி உள்ளது.






