என் மலர்
தேனி
- சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா உள்பட ஐம்பெரும் விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் சீர் மரபினர் நலச்சங்கத்தினர், இலக்கிய பேரவையினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கம்பம்:
கம்பத்தில் நண்பர்கள் சமூக இலக்கிய பேரவை மற்றும் சீர் மரபினர் நலச்சங்கம் இணைந்து நடத்திய கம்பத்தின் முதல் நகரத் தலைவர் ராமசாமி நூற்றாண்டு விழா, பேராசிரியர் புதியவனின் நூல் வெளியீட்டு விழா, சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேராசிரியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சமூக இலக்கிய பேரவை செயலாளர் சேகர் வரவேற்றார். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உரையாற்றினார். கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், கம்பம் நகர தி.மு.க. செயலாளர் வீரபாண்டியன், ராயப்பன்பட்டி எஸ்.யு.எம் பள்ளி தாளாளர் பிரபாகர், கம்பம் ஜமாத் கமிட்டி தலைவர் ஜெயினுலாபுதீன், கம்பம் தூய ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை செபாஸ்டின் டைட்டஸ், கம்பம் ஆர்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் ராஜாங்கம், த.மு.எ.க.ச. மாநில குழு சிவாஜி, வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழகம் பாவெல் பாரதி, தொழிலதிபர் அன்பழகன், கவிஞர் பாரதன் உட்பட பலர் பேசினர்.
தேசிய செட்டியார்கள் பேரவை தலைவர் ஜெகநாத் மிஸ்ரா நூல் வெளியிட ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஓய்வு பெற்ற எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி உதவி பேராசிரியர் முகமது ரபிக் என்ற மானசிகன் நூலை அறிமுகம் செய்து பேசினார். கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் சீர் மரபினர் நலச்சங்கத்தினர், இலக்கிய பேரவையினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இந்தியா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
- தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த பாஸ் தி பால் கோப்பைக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில், 7-வது "ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி" தொடர்பாக "பாஸ் தி பால் கோப்பைக்கு" கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
16 ஆண்டுகளுக்கு பின்பு நமது மாநிலத்தில் நடைபெற உள்ளது. சர்வதேச அளவிலான இப்போட்டிகளை சிறப்பாக கொண்டாடவும் இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், பாஸ் தி பால் டிராபி டூர் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களை கடந்து தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த பாஸ் தி பால் கோப்பைக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சரவணக்குமார் எம்.எல்.ஏ., விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கோப்பையுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். விளையாட்டு வீரர்களுக்கு இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஏ.எஸ்.பி. சுகுமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, தேனி-அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தேனி ஹாக்கி சங்க தலைவர் செந்தில், ஹாக்கி சங்க செயலாளர், சங்கிலிகாளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனயாளி மட்டுமே பயன்பெற முடியும்.
- சின்னமனூர் கூட்டுறவு நியாய விலை கடைகளில் பொதுமக்களிடம் ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவு குறித்தும் கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொைக ரூ.1000 வழங்கும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மக்களிடம் கலெக்டர் ஷஜீவனா நேரில் கேட்டு அறிந்து ஆய்வு செய்தார். ரூ.1000 வழங்குவதற்கான மாவட்ட கலெக்டர் கூறினார்.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனயாளி மட்டுமே பயன்பெற முடியும். ஒரு குடும்பத்தில் தகுதி உடையவர்கள் ஒருவருக்கு மேல் இருந்தால் ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினராக முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
மேலும் சின்னமனூர் கூட்டுறவு நியாய விலை கடைகளில் பொதுமக்களிடம் ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவு குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- நிகழ்ச்சியில் முதலில் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டு.வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு நோட்டீசுகள் வழங்கப்பட்டன.
- வீடுகளில் குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்கிடவும், வீட்டிலேயே மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போடி:
போடி நகராட்சி சார்பில் குப்பைகளை அகற்றி தூய்மை நகராக மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் இயக்கத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு பேரணி நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முதலில் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு நோட்டீசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் செல்வராணி, 5வது பகுதி நகர்மன்ற உறுப்பினர் முத்துமணி, துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன், சுரேஷ்குமார், அகமது நபி, கணேசன், எச் . எம் டிரஸ்ட் மாணவர்கள், நகராட்சியின் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழு வினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வீடுகளில் குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்கிடவும், வீட்டிலேயே மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- மார்க்கையன்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
சின்னமனூர்:
மார்க்கையன்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிக்குத்தி, கீழசிந்தலைச்சேரி, மேல சிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
- கட்டுப்பாட்டை இழந்த வேன் மற்றொரு பைக்கில் வந்தவர் மீதும் மோதி விபத்துக்கு ள்ளானது.
- இந்த சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (40). இவர் சில்வார்பட்டியில் இருந்து தனது ஊருக்கு பைக்கில் வந்து கொண்டிரு ந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த வேன் முத்துப்பாண்டி மீது மோதியது. மேலும் கட்டு ப்பாட்டை இழந்த வேன் மற்றொரு பைக்கில் வந்த அறிவழகன் (38) என்பவர் மீதும் மோதி விபத்துக்கு ள்ளானது.
இவர்கள் 2 பேரையும் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே முத்துப்பாண்டி இறந்து விட்டார். அறிவழ கனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடை க்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையைச் சேர்ந்த வர் செந்தூரப்பாண்டி (வயது 31). சம்பவத்தன்று வீட்டில் இருந்த செந்தூரப்பாண்டி திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடை க்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
தேவாரம் அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் இம்ரான் ரியாஸ் (23). சம்பவத்தன்று வெளியே சென்றவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை தேவாரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார்.
- அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே ஜி.தும்மலப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 34). இவர் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் அவரது தலை அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தேவதான ப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியில் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
- இன்று காலை முல்லைப்பெரியாறு அணைக்கு 737 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 120.10 அடியாக உள்ளது.
கூடலூர்:
கேரளாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியில் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக நீர் வரத்து குறைந்திருந்த நிலையில் இன்று காலை முல்லைப்பெரியாறு அணைக்கு 737 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 120.10 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர் மட்டம் 49.59 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடி. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 76.88 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 24.2, தேக்கடி 21.6, கூடலூர் 2.6, உத்தம பாளையம் 1.4, சண்முகாநதி அணை 2.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
- முகாமில் குடிநீரின் தரம், பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வருசநாடு:
மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ள கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
குடிநீர் வடிகால் வாரிய தேனி மாவட்ட நிர்வாக பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கடமலை-மயிலை ஒன்றிய குழு தலைவர் சித்ரா சுரேஷ், ஒன்றிய ஆணையர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் குடிநீரின் தரம், பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை மகளிர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- குடிதண்ணீர், கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
- எனவே பேரூராட்சி, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகிலுள்ள சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் ஆடிவார திருவிழா நேற்று ெகாடி ஏற்றத்துடன் தொடங்கியது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கிறார்கள்.
ஆனால் குடிதண்ணீர், கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சுரபிநதி மேம்பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பேரூராட்சி, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூட்டத்தில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிர்புறத்தில்ரெயில் நிறுத்தம் தேவை, தேனியில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் பொருட்டு மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
தேனி:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க முதல் மாவட்ட பேரவை கூட்டம் தேனி சில்லரை பலசரக்கு வணிகர்கள் சங்க மண்ட பத்தில் மாவட்ட தலைவர் உடையாளி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சென்னமராஜ், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பிரசாத்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார். கூட்டத்தில் கல்வித்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகன், தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்.தேன்மொழி, டி.டி.ஏ.ஹெச்.ஏ மாநில தலைவர் சாமிக்கண்ணு, பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் உள்பட அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிர்புறத்தில் ெரயில் நிறுத்தம் தேவை. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனியில் போக்குவரத்து நெரி சலை கட்டுபடுத்தும் பொருட்டு மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பட்டதாரி மற்றும் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகையினை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டாக உயர்த்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பினை மீண்டும் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முடிவில் முருகமணி நன்றி கூறினார்.






