என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார மேலாண்மை பயிற்சி"

    • கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • முகாமில் குடிநீரின் தரம், பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    வருசநாடு:

    மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ள கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

    குடிநீர் வடிகால் வாரிய தேனி மாவட்ட நிர்வாக பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கடமலை-மயிலை ஒன்றிய குழு தலைவர் சித்ரா சுரேஷ், ஒன்றிய ஆணையர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் குடிநீரின் தரம், பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை மகளிர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×