என் மலர்
தேனி
- உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடை க்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையைச் சேர்ந்த வர் செந்தூரப்பாண்டி (வயது 31). சம்பவத்தன்று வீட்டில் இருந்த செந்தூரப்பாண்டி திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடை க்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
தேவாரம் அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் இம்ரான் ரியாஸ் (23). சம்பவத்தன்று வெளியே சென்றவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை தேவாரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார்.
- அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே ஜி.தும்மலப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 34). இவர் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் அவரது தலை அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தேவதான ப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியில் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
- இன்று காலை முல்லைப்பெரியாறு அணைக்கு 737 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 120.10 அடியாக உள்ளது.
கூடலூர்:
கேரளாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியில் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக நீர் வரத்து குறைந்திருந்த நிலையில் இன்று காலை முல்லைப்பெரியாறு அணைக்கு 737 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 120.10 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர் மட்டம் 49.59 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடி. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 76.88 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 24.2, தேக்கடி 21.6, கூடலூர் 2.6, உத்தம பாளையம் 1.4, சண்முகாநதி அணை 2.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
- முகாமில் குடிநீரின் தரம், பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வருசநாடு:
மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ள கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
குடிநீர் வடிகால் வாரிய தேனி மாவட்ட நிர்வாக பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கடமலை-மயிலை ஒன்றிய குழு தலைவர் சித்ரா சுரேஷ், ஒன்றிய ஆணையர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் குடிநீரின் தரம், பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை மகளிர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- குடிதண்ணீர், கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
- எனவே பேரூராட்சி, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகிலுள்ள சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் ஆடிவார திருவிழா நேற்று ெகாடி ஏற்றத்துடன் தொடங்கியது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கிறார்கள்.
ஆனால் குடிதண்ணீர், கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சுரபிநதி மேம்பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பேரூராட்சி, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூட்டத்தில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிர்புறத்தில்ரெயில் நிறுத்தம் தேவை, தேனியில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் பொருட்டு மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
தேனி:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க முதல் மாவட்ட பேரவை கூட்டம் தேனி சில்லரை பலசரக்கு வணிகர்கள் சங்க மண்ட பத்தில் மாவட்ட தலைவர் உடையாளி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சென்னமராஜ், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பிரசாத்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார். கூட்டத்தில் கல்வித்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகன், தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்.தேன்மொழி, டி.டி.ஏ.ஹெச்.ஏ மாநில தலைவர் சாமிக்கண்ணு, பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் உள்பட அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிர்புறத்தில் ெரயில் நிறுத்தம் தேவை. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனியில் போக்குவரத்து நெரி சலை கட்டுபடுத்தும் பொருட்டு மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பட்டதாரி மற்றும் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகையினை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டாக உயர்த்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பினை மீண்டும் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முடிவில் முருகமணி நன்றி கூறினார்.
- மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டிருந்த உறவினரை நலம் விசாரிப்பதற்காக முருகன் பெங்களூருவில் இருந்து தேனிக்கு வந்தார்.
- மனமுடைந்த நிலையில் கா ணப்பட்ட முருகன் அவரது உறவினர்கள் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். அங்கிருந்த வேப்பமரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வருசநாடு:
கடமலைக்குண்டு அருகே குமண ன்தொழுவை சே ர்ந்தவர் முருகன் (வயது 48). இவரது மனைவி சாரதா. இவ ர்களுக்கு 20 வயதில் மகனும், 16 வயதில் மகளும் உள்ள னர். இவ ர்கள் அனை வரும் கர்நாடக மாநிலம் பெங்க ளூருவில் தங்கி முறுக்கு தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டிருந்த உறவினரை நலம் விசாரிப்பதற்காக முருகன் பெங்களூருவில் இருந்து தேனிக்கு வந்தார். மருத்துவமனையில் இருந்து சொந்த கிராமமான குமணன்தொழுவிற்க்கு வந்திருந்தார். அப்போது மனமுடைந்த நிலையில் கா ணப்பட்ட முருகன் அவரது உறவி னர்கள் யாரிடமும் பேசாமல் இரு ந்துள்ளார். இந்நி லையில் கும ணன்தொழு அரசு பள்ளிக்கு சென்ற முருகன் அங்கிருந்த வேப்பமரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த மயிலாடும்பாறை போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்தத ற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் சீராக குறைந்த நீர்மட்டம் இன்று காலை 50 அடிக்கும் கீழ் சரிந்து 49.57 அடியாக உள்ளது.
- தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் விவசாய பணிகளை தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இதனை நம்பி ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் பயிர்சாகுபடி செய்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் ெதாடங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை இல்லை. மேலும் வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கண்டமனூர் பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்வதால் மூலவைகையாற்றில் தண்ணீர் வரத்து குறைவாகவே உள்ளது.
இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. இருந்தபோதும் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் சீராக குறைந்த நீர்மட்டம் இன்று காலை 50 அடிக்கும் கீழ் சரிந்து 49.57 அடியாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். அணையின் நீர்மட்டம் 64 அடிக்கு மேல் இருந்தால் 58-ம் கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது மிகவும் குறைந்தே நீர்மட்டம் உள்ளது. இதனால் குடிநீ ருக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் விவசாய பணிகளை தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. 404 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.17 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 7.8, தேக்கடி 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- விழா கமிட்டி மற்றும் இந்து எழுச்சி முன்னணி, இந்து சமுதாய பொறுப்பாளர்கள் சார்பில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
- சுமார் 3 அடி முதல் 13 அடி வரை 410 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சின்னமனூர்:
செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. 39 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி மற்றும் இந்து எழுச்சி முன்னணி, இந்து சமுதாய பொறுப்பாளர்கள் சார்பில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
சுமார் 3 அடி முதல் 13 அடி வரை 410 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சின்னமனூர் நகர் ஒன்றிய கமிட்டி பொறுப்பாளர்கள் பார்வையிட்டனர்.
- கூட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த கே.எம்.பட்டி தமிழ்செல்வன் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டது.
- முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்டது.
சின்னமனூர்:
சின்னமனூரில் தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீர மங்கைகள் நலச்சங்கம், தேனி வைகை ஜவான் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த கே.எம்.பட்டி தமிழ்செல்வன் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டது.
முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதற்கு கலெக்டர் மற்றும் தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நல அலுவலக துணை இயக்குனருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் சங்க தலைவர் பவுன், செயலாளர் சிவபாண்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- ஜீப் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிறுமி படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து ஜீப் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகில் உள்ள மேக்கிலார்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி(29). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி-மதுரை மெயின்ரோடு கொண்டமநாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த ஜீப் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் வந்த மேக்கிலார்பட்டியை சேர்ந்த குபேந்திரன் மகள் மித்ராதேவி(12) என்பவர் படுகாயமடைந்தார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து ஜீப் டிரைவரான விக்னேஷ் என்பரிடம் விசாரித்து வருகின்றனர்.
- பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயமானதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள அல்லிநகரம் கக்கன்கா லனியை சேர்ந்தவர் ஆண்ட வர் மகள் சரண்யா(18). கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தனக்கு உடல்நிலை சரியில்லை என கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
பின்னர் தனது செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறை வானார். இதுகுறித்து அவரது தாய் வீரலட்சுமி அல்லிநகரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
கூடலூர் கன்னிகாளி புரத்தை சேர்ந்த பாலமுரு கன் மனைவி செல்வி(32). இவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார்.இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலைய த்தில் அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.






