என் மலர்tooltip icon

    தேனி

    • என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை தேடி சென்றார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
    • மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேவதானப்பட்டி:

    கொடைக்கானல் பூண்டி முதல் தெருவை சேர்ந்தவர் மனோகரன் மகன் அலெக்ஸ்பாண்டி(23). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை தேடி சென்றார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

    இதனால் மனமுடைந்த அலெக்ஸ்பாண்டி தேவதானப்பட்டியில் உள்ள தனது அண்ணன்வீட்டிற்கு வந்தார். நேற்று அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே விஷம்குடித்து மயங்கி கிடந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் மாரிமுத்து கொடுத்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று 120.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 120.80 அடியாக உயர்ந்துள்ளது.
    • லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மட்டும் இயக்கப்பட்டு 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குறைந்து கொண்டே வந்த அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று காலை 1091 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1321 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    மேலும் நேற்று 120.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 120.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து 400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2786 மி.கனஅடியாக உள்ளது.

    கேரளாவில் தற்போது பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்மட்டம் மேலும் உயரும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    பெரியாறு அணையிலிருந்து 400 கனஅடி திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மட்டும் இயக்கப்பட்டு 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    71 அடி உயரம் உள்ள வைகைஅணையின் நீர்மட்டம் 49.25 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாவட்ட குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1895 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 76.32 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 16, தேக்கடி 12.2, சோத்துப்பாறை 4, கூடலூர், உத்தமபாளையம், சண்முகாநதிஅணை பகுதிகளில் தலா 1 மி.மீ என மழை பதிவாகி உள்ளது.

    • பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.
    • நிலங்களை உழுதுவிட்டு மழையின்றி கண்மாய் மற்றும் குளங்களில் நீர் வற்றி வறண்டு கிடப்பதை பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் இருந்து சுமார் 3 கி்,மீ தூரத்தில் உள்ளது அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சி. தேனி மாவட்டத்தின் திற்பரப்பு என்று அழைக்கப்படக்கூடிய நூறாண்டுகள் பழமை வாய்ந்த இந்த நீர் வீழ்ச்சி தடுப்பணை போடியை சுற்றியுள்ள சுமார் 15 ஆயிரம்ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

    மேலும் உள்ளூர் வெளியூர் சுற்றுலா பயணிகளின் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீர் வரத்து பகுதியான இந்த அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சி மூலம் போடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பங்காரு சாமி குளம், செட்டிகுளம், மீனாட்சியம்மன் கண்மாய் போன்ற மிக முக்கியமான குளங்களுக்கும் கண்மாய்களுக்கும் முக்கிய நீர் வரத்து பகுதியாக விளங்குகிறது.

    இதிலிருந்து வெளியேறும் உபரி நீர் தேனி முல்லைப் பெரியாறு மூலம் வைகை அணையில் சென்று சேர்கிறது, தற்போது போடியை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை கேரள எல்லைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.

    இதனால் பங்காரு சாமி மீனாட்சிபுரம் அருகில் உள்ள செட்டிகுளம் மற்றும் மீனாட்சி அம்மன் கண்மாய்களுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் குளங்கள் நீர் வற்றிய நிலையில் வறண்டு காட்சியளிக்கின்றன.

    இதனால் இந்த கண்மாய் மற்றும் குளங்களை நம்பி உள்ள விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் விவசாயம் செய்வதற்காக நிலங்களை உழுதுவிட்டு மழையின்றி கண்மாய் மற்றும் குளங்களில் நீர் வற்றி வறண்டு கிடப்பதை பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பணியில் இருந்த பவுனுத்தாய் கீழே விழுந்ந்தும் அவரது மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
    • ஆனால் அந்த பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த காமராஜ் மனைவி பவுனுத்தாய் (வயது 55). இவர் கடந்த 10 வருடங்களாக முருகமலை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பணியில் இருந்த பவுனுத்தாய் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இது குறித்து நிறுவனத்தின் ஊழியர் அவரது மகன் பாண்டியராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பதறியடித்துக் கொண்டு பாண்டியராஜன் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    ஆனால் பவுனுத்தாய் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியராஜன் தனது தாய் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, எஸ்.எஸ்.ஐ. சவுந்தரவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி, ஒரு பெண் மற்றும் 10ம் வகுப்பு மாணவன் உள்பட மாயமாகினர்.
    • அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை 9-வது வார்டு கருப்பையா தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகள் ஓவியா (வயது 19). இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு வராததால் இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தாய் ராதிகா கல்லூரியில் வந்து விசாரித்து உறவினர் வீடுகள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

    அதில் மார்க்கையன் கோட்டையைச் சேர்ந்த விஜய் என்பவர்தான் கடத்திச் சென்றிருக்க கூடும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே உள்ள பங்களாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகள் பேபி ஷாலினி (21). இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது தந்தை பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி தாலுகா கரட்டுப்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்த சிவனாண்டி மகன் ஸ்ரீதர் (வயது 16). 10ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவர் மாலையில் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை சிவனாண்டி க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை அணையின் நீர் மட்டம் 120.40 அடியாக உயர்ந்துள்ளது.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என விவசாயிகள் நம்பிக்கையடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    கேரளாவில் தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கி சில நாட்களிலேயே நின்று போனது.

    இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்து கொண்டே வந்தது. கடந்த 11-ந் தேதி அதிகபட்சமாக அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டியது. அவ்வப்போது லேசான மழை பெய்த போதும் அணைக்கு நீர் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை.

    அதே வேளையில் பாசனத்துக்காக பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் கேரளாவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

    குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணையின் நீர் மட்டம் 120.10 அடியாக இருந்தது.

    இன்று காலை அணையின் நீர் மட்டம் 120.40 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 737 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1092 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2707 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என விவசாயிகள் நம்பிக்கையடைந்துள்ளனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணை நீர் மட்டம் 49.31 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் குடிநீருக்காக மட்டும் 69 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1903 மில்லியன் கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 76.62 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 20.6, தேக்கடி 14.4, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 1.4, சண்முகாநதி அைண 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா உள்பட ஐம்பெரும் விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சீர் மரபினர் நலச்சங்கத்தினர், இலக்கிய பேரவையினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கம்பம்:

    கம்பத்தில் நண்பர்கள் சமூக இலக்கிய பேரவை மற்றும் சீர் மரபினர் நலச்சங்கம் இணைந்து நடத்திய கம்பத்தின் முதல் நகரத் தலைவர் ராமசாமி நூற்றாண்டு விழா, பேராசிரியர் புதியவனின் நூல் வெளியீட்டு விழா, சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேராசிரியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சமூக இலக்கிய பேரவை செயலாளர் சேகர் வரவேற்றார். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உரையாற்றினார். கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், கம்பம் நகர தி.மு.க. செயலாளர் வீரபாண்டியன், ராயப்பன்பட்டி எஸ்.யு.எம் பள்ளி தாளாளர் பிரபாகர், கம்பம் ஜமாத் கமிட்டி தலைவர் ஜெயினுலாபுதீன், கம்பம் தூய ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை செபாஸ்டின் டைட்டஸ், கம்பம் ஆர்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் ராஜாங்கம், த.மு.எ.க.ச. மாநில குழு சிவாஜி, வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழகம் பாவெல் பாரதி, தொழிலதிபர் அன்பழகன், கவிஞர் பாரதன் உட்பட பலர் பேசினர்.

    தேசிய செட்டியார்கள் பேரவை தலைவர் ஜெகநாத் மிஸ்ரா நூல் வெளியிட ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஓய்வு பெற்ற எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி உதவி பேராசிரியர் முகமது ரபிக் என்ற மானசிகன் நூலை அறிமுகம் செய்து பேசினார். கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் சீர் மரபினர் நலச்சங்கத்தினர், இலக்கிய பேரவையினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இந்தியா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
    • தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த பாஸ் தி பால் கோப்பைக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில், 7-வது "ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி" தொடர்பாக "பாஸ் தி பால் கோப்பைக்கு" கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்தியா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    16 ஆண்டுகளுக்கு பின்பு நமது மாநிலத்தில் நடைபெற உள்ளது. சர்வதேச அளவிலான இப்போட்டிகளை சிறப்பாக கொண்டாடவும் இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், பாஸ் தி பால் டிராபி டூர் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களை கடந்து தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த பாஸ் தி பால் கோப்பைக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சரவணக்குமார் எம்.எல்.ஏ., விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கோப்பையுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். விளையாட்டு வீரர்களுக்கு இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஏ.எஸ்.பி. சுகுமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, தேனி-அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தேனி ஹாக்கி சங்க தலைவர் செந்தில், ஹாக்கி சங்க செயலாளர், சங்கிலிகாளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனயாளி மட்டுமே பயன்பெற முடியும்.
    • சின்னமனூர் கூட்டுறவு நியாய விலை கடைகளில் பொதுமக்களிடம் ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவு குறித்தும் கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொைக ரூ.1000 வழங்கும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மக்களிடம் கலெக்டர் ஷஜீவனா நேரில் கேட்டு அறிந்து ஆய்வு செய்தார். ரூ.1000 வழங்குவதற்கான மாவட்ட கலெக்டர் கூறினார்.

    ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனயாளி மட்டுமே பயன்பெற முடியும். ஒரு குடும்பத்தில் தகுதி உடையவர்கள் ஒருவருக்கு மேல் இருந்தால் ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினராக முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

    மேலும் சின்னமனூர் கூட்டுறவு நியாய விலை கடைகளில் பொதுமக்களிடம் ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவு குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • நிகழ்ச்சியில் முதலில் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டு.வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு நோட்டீசுகள் வழங்கப்பட்டன.
    • வீடுகளில் குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்கிடவும், வீட்டிலேயே மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    போடி:

    போடி நகராட்சி சார்பில் குப்பைகளை அகற்றி தூய்மை நகராக மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் இயக்கத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு பேரணி நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முதலில் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு நோட்டீசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் செல்வராணி, 5வது பகுதி நகர்மன்ற உறுப்பினர் முத்துமணி, துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன், சுரேஷ்குமார், அகமது நபி, கணேசன், எச் . எம் டிரஸ்ட் மாணவர்கள், நகராட்சியின் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழு வினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வீடுகளில் குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்கிடவும், வீட்டிலேயே மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • மார்க்கையன்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    சின்னமனூர்:

    மார்க்கையன்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிக்குத்தி, கீழசிந்தலைச்சேரி, மேல சிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • கட்டுப்பாட்டை இழந்த வேன் மற்றொரு பைக்கில் வந்தவர் மீதும் மோதி விபத்துக்கு ள்ளானது.
    • இந்த சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (40). இவர் சில்வார்பட்டியில் இருந்து தனது ஊருக்கு பைக்கில் வந்து கொண்டிரு ந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த வேன் முத்துப்பாண்டி மீது மோதியது. மேலும் கட்டு ப்பாட்டை இழந்த வேன் மற்றொரு பைக்கில் வந்த அறிவழகன் (38) என்பவர் மீதும் மோதி விபத்துக்கு ள்ளானது.

    இவர்கள் 2 பேரையும் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே முத்துப்பாண்டி இறந்து விட்டார். அறிவழ கனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×