என் மலர்
நீங்கள் தேடியது "Private employement camp"
- வருகிற 2-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்துகின்றன.
- முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் உயர் கல்வி பயின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
தேனி:
தேனி மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமை வருகிற 2-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்துகின்றன.
இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் உயர் கல்வி பயின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். எனவே முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.






