என் மலர்
நீங்கள் தேடியது "water level crossed"
- இருந்தபோதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டமும் சீராக உயர்ந்தது.
- நீர் மட்டம் இன்று காலை 121.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1321 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததால் அணையின் நீர் மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இருந்தபோதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டமும் சீராக உயர்ந்தது. நேற்று 120.80 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை 121.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1321 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணை நீர் மட்டம் 49.21 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாமல் இருந்த நிலையில் இன்று காலை 47 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.92 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 76.03 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 15, தேக்கடி 8.2, சண்முகா நதி அணை 1.2, உத்தமபாளையம் 0.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.






