என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Highways Hills"

    • பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சத்துணவு மையத்தை சீரமைக்கவும், கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
    • அனுமதி யின்றி சொகுசு விடுதிகள் கட்ட மட்டும் அனுமதி வழங்கிய நிலையில் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி மறுப்பது வியப்பாக உள்ளது என்று தெரிவித்தனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகில் உள்ள மேற்குதொடர்ச்சி மலை ப்பகுதியில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இங்குள்ள மேகமலை, ஹைவேவிஸ் , மணலார், மேல்மணலார், வெண்ணி யார், இரவங்கலாறு, மகாராஜாமெட்டு ஆகிய 7 கிராமங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள மாணவ-மாணவிகள் ைஹவேவிஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சத்துணவு மையத்ைத சீரமைக்கவும், கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரி விக்கையில், நூற்றுக்க ணக்கான மாணவ-மாணவிகள் பயின்று வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் இடப்பற்றாக்குறையால் சிரமம் அடைந்து வருகின்ற னர். இங்குள்ள மாணவர்க ளுக்கு இந்த அரசு பள்ளி மட்டுமே உள்ளது.

    மாணவர்கள் நலன் கருதி கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட குழி தோண்டப்பட்டது. ஆனால் வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நிறுத்த ப்பட்டது. ஹைவே விஸ் பேரூராட்சி யில் 100 ஆண்டுகளுக்கு மேலாக தேயிலை தோட்ட தொழி லாளர்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி புலிகள் காப்பகமாக மாறியதால் கட்டுமான பணிக்கு அனு மதி இல்லை என வனத்துறை யினர் தெரி விக்கின்றனர். அனுமதி யின்றி சொகுசு விடுதிகள் கட்ட மட்டும் அனுமதி வழங்கிய நிலையில் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி மறுப்பது வியப்பாக உள்ளது என்று தெரிவித்தனர்.

    ×