பெரியகுளத்தில் தனியார் நிறுவனத்தில் பெண் மர்மச்சாவு

சம்பவத்தன்று பணியில் இருந்த பவுனுத்தாய் கீழே விழுந்ந்தும் அவரது மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த காமராஜ் மனைவி பவுனுத்தாய் (வயது 55). இவர் கடந்த 10 வருடங்களாக முருகமலை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று பணியில் இருந்த பவுனுத்தாய் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இது குறித்து நிறுவனத்தின் ஊழியர் அவரது மகன் பாண்டியராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பதறியடித்துக் கொண்டு பாண்டியராஜன் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

ஆனால் பவுனுத்தாய் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியராஜன் தனது தாய் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, எஸ்.எஸ்.ஐ. சவுந்தரவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com