என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சந்தாங்கி மலை"

    • பஞ்சந்தாங்கி மலை யில் தீ விபத்து ஏற்பட்டது. காற்று வேகமாக வீசியதால் காட்டுத் தீ மளமளவென பரவி வருகிறது.
    • வனத்துறையினர் அதிநவீன எந்திரங்களை வரவழைத்து தீயை கட்டுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு வனச்சரகத்துக்கு உட்பட்டது பஞ்சந்தாங்கி மலை. இப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்கள், வன விலங்குகள் உள்ளன. கடந்த சில நாட்க ளாக ஆடி மாத காற்று அதிக வேகத்தில் வீசி வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை பஞ்சந்தாங்கி மலை யில் தீ விபத்து ஏற்பட்டது. காற்று வேகமாக வீசியதால் காட்டுத் தீ மளமளவென பரவி வருகிறது. நேற்று இரவு தொடங்கிய காட்டுத்தீ இன்றும் தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் ஊருக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர்.

    மேலும் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைகள் எரிந்து வருவதால் வேதனையடைந்துள்ளனர். வழக்கமாக இந்த மாதத்தில் தென் மேற்கு பருவ மழை பெய்யும். இதனால் காற்று அதிகமாக வீசினாலும் உடனுக்குடன் தீ பரவுவது கட்டுபடுத்தப்படும்.

    ஆனால் தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை அவ்வப்போது பெய்தாலும் தீயின் வேகத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு பெய்யவில்லை. இதனால் மேலும் தீ பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    வனத்துறையினர் அதிநவீன எந்திரங்களை வரவழைத்து தீயை கட்டுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×