என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anai pillaiyar falls"

    • பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.
    • நிலங்களை உழுதுவிட்டு மழையின்றி கண்மாய் மற்றும் குளங்களில் நீர் வற்றி வறண்டு கிடப்பதை பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் இருந்து சுமார் 3 கி்,மீ தூரத்தில் உள்ளது அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சி. தேனி மாவட்டத்தின் திற்பரப்பு என்று அழைக்கப்படக்கூடிய நூறாண்டுகள் பழமை வாய்ந்த இந்த நீர் வீழ்ச்சி தடுப்பணை போடியை சுற்றியுள்ள சுமார் 15 ஆயிரம்ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

    மேலும் உள்ளூர் வெளியூர் சுற்றுலா பயணிகளின் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீர் வரத்து பகுதியான இந்த அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சி மூலம் போடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பங்காரு சாமி குளம், செட்டிகுளம், மீனாட்சியம்மன் கண்மாய் போன்ற மிக முக்கியமான குளங்களுக்கும் கண்மாய்களுக்கும் முக்கிய நீர் வரத்து பகுதியாக விளங்குகிறது.

    இதிலிருந்து வெளியேறும் உபரி நீர் தேனி முல்லைப் பெரியாறு மூலம் வைகை அணையில் சென்று சேர்கிறது, தற்போது போடியை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை கேரள எல்லைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.

    இதனால் பங்காரு சாமி மீனாட்சிபுரம் அருகில் உள்ள செட்டிகுளம் மற்றும் மீனாட்சி அம்மன் கண்மாய்களுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் குளங்கள் நீர் வற்றிய நிலையில் வறண்டு காட்சியளிக்கின்றன.

    இதனால் இந்த கண்மாய் மற்றும் குளங்களை நம்பி உள்ள விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் விவசாயம் செய்வதற்காக நிலங்களை உழுதுவிட்டு மழையின்றி கண்மாய் மற்றும் குளங்களில் நீர் வற்றி வறண்டு கிடப்பதை பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    ×