என் மலர்
நீங்கள் தேடியது "மாவட்ட பேரவை கூட்டம்"
- கூட்டத்தில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிர்புறத்தில்ரெயில் நிறுத்தம் தேவை, தேனியில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் பொருட்டு மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
தேனி:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க முதல் மாவட்ட பேரவை கூட்டம் தேனி சில்லரை பலசரக்கு வணிகர்கள் சங்க மண்ட பத்தில் மாவட்ட தலைவர் உடையாளி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சென்னமராஜ், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பிரசாத்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார். கூட்டத்தில் கல்வித்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகன், தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்.தேன்மொழி, டி.டி.ஏ.ஹெச்.ஏ மாநில தலைவர் சாமிக்கண்ணு, பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் உள்பட அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிர்புறத்தில் ெரயில் நிறுத்தம் தேவை. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனியில் போக்குவரத்து நெரி சலை கட்டுபடுத்தும் பொருட்டு மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பட்டதாரி மற்றும் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகையினை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டாக உயர்த்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பினை மீண்டும் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முடிவில் முருகமணி நன்றி கூறினார்.






