என் மலர்
சேலம்
- தமிழக ெதாடக்கக்கல்வி துறையில் வட்டார அளவில் பள்ளிகளை நிர்வகிக்க, வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
- இதைத்தவிர போட்டித் தேர்வு மூலம் நேரடியாகவும் நிரப்பப்படுகிறது.
சேலம்:
தமிழக ெதாடக்கக்கல்வி துறையில் வட்டார அளவில் பள்ளிகளை நிர்வகிக்க, வட்டார கல்வி அலு வலர்கள் நியமிக்கப்படு கின்றனர். ஆசிரியர் களுக்கான பதவி உயர்வு மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இதைத்தவிர போட்டித் தேர்வு மூலம் நேரடியாகவும் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் நேரடி நியமனம் மூலம் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த மாதம் அறிவிப்பு வெளி யானது.
கடந்த மாதம் 6-ந்தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக் கான தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வர்களுக்கும் தமிழில் 50 மதிப்பெண்ணுக்கும், பாடம் சார்ந்த தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடக்கிறது.
இதற்காக விண்ணப்பிக்க இன்று (5-ந்தேதி) கடைசி நாளாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதனிடையே விண்ணப்பத்தை பதிவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருகிற 12-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் துள்ளது.
- ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் (வயது 42), கூலி தொழிலாளி குடிப்பழக்கம் கொண்டவர்.
- சாதிக் வேலைக்கு சென்று விட்டு வரும்போது குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகர் குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் (வயது 42), கூலி தொழிலாளி குடிப்பழக்கம் கொண்டவர். இவரது மனைவி ஹசினா (37), இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
சாதிக் வேலைக்கு சென்று விட்டு வரும்போது குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ஹசினா குழந்தைகளுடன் வெளியே சென்று விட்டு சிறிது நேரத்தில் பிறகு வீட்டிற்கு வந்தார்.
அப்போது சாதிக் துணியால் அவரது கழுத்தை நெறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஹசினா, சாதிக்கை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, தகவல் அறிந்த கிச்சிபாளையம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சாதிக் அவரே கழுத்தை நெரித்து தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கழுத்தை நெறித்து கொன்றார்களா? இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பிரேத பரிசோதனை முழு அறிக்கை வந்தால் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்ற விவரம் தெரியவரும்.
- மகாலட்சுமி (வயது 46). இவர் நேற்று பகல் 1 மணியளவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
- அங்கு அலுவலகத்தின் முன்பு நின்ற அவர் திடீரென தனது கட்டைப்பையில் வைத்திருந்த கேனில் உள்ள பெட்ரோலை எடுத்து தலை மற்றும் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சியில் கடந்த 17 ஆண்டுகளாக துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வருபவர் மகாலட்சுமி (வயது 46). இவர் நேற்று பகல் 1 மணியளவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அலுவலகத்தின் முன்பு நின்ற அவர் திடீரென தனது கட்டைப்பையில் வைத்திருந்த கேனில் உள்ள பெட்ரோலை எடுத்து தலை மற்றும் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஓடி வந்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி நனைத்தபடியால் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள தாரமங்கலம் நங்கவள்ளி மெயின் ரோட்டில் உருண்டு விழுந்து கதறி துடித்துள்ளார்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கவுன்சிலர் சின்னுசாமி. செல்வமணி ஆகியோர் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, துப்புரவு ஆய்வாளர் கோபிநாத் ஆகியோரிடம் மகாலட்சுமிக்கு ஆதரவாக விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
அப்போது அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுத பெண் ஊழியர் மகாலட்சுமி கூறியதாவது:- நகராட்சியில் பணிபுரியும் சக துப்புரவு ஊழியர் ஒருவர் தான் அதிகாரி போல் நடந்து கொண்டு என்னை ஒருமையில் திட்டி வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடுவதும்,என்னை அலுவலகத்திற்கு வெளியில் நிறுத்தியும் கொடுமை படுத்துகிறார். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறியும் எனக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.
இதையடுத்து பெண் ஊழியரை மீட்டு தாரமங்கலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தரமாங்கலம் நகராட்சியில் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மகாலட்சுமி புகார் கூறிய சக துப்புரவு ஊழியரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த மாதம் 6-ந்தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
- விண்ணப்பத்தை பதிவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
சேலம்:
தமிழக தொடக்கக்கல்வி துறையில் வட்டார அளவில் பள்ளிகளை நிர்வகிக்க, வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இதைத்தவிர போட்டித்தேர்வு மூலம் நேரடியாகவும் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் நேரடி நியமனம் மூலம் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
கடந்த மாதம் 6-ந்தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கான தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வர்களுக்கும் தமிழில் 50 மதிப்பெண்ணுக்கும், பாடம் சார்ந்த தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடக்கிறது.
இதற்காக விண்ணப்பிக்க இன்று (5-ந்தேதி) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே விண்ணப்பத்தை பதிவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருகிற 12-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறக்கப்படுகிறது.
- நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து விநாடிக்கு 700 கன அடியாக நீடிக்கிறது.
அதே சமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 163 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 188 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறக்கப்படுகிறது.
நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 86.77 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 85.97 கன அடியாக சரிந்துள்ளது.
- தொடர் கலவரத்தால் சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தொடர் கலவரத்தால் சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது.
இதில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதாக கூறியும், அங்கு அமைதி ஏற்படுத்த கோரியும் சேலம் மாவட்ட கிறிஸ்தவ பாதுகாப்பு அமைப்பு சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் சி.எஸ்.ஐ ஈரோடு சேலம் திருமண்டல செயலாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் ஏராள மானோர் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது, மணிப்பூரில் நடைபெற்று வரும் தொடர் கலவரத்தால் சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலயங்கள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ்கள் தீ வைத்து கொளுத்தப்படுகிறது. எனவே அங்கு நடைபெறும் மத கலவரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அமைதி பூங்காவாக மாற்ற வேண்டும். மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 348 சிறுவர்கள், 161 சிறுமிகள் என மொத்தம் 509 பேர் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
- பின்னர் அனைவரையும் பத்திரமாக போலீசார் அழைத்து வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி அறிவுரை யின்படி சேலம் சரகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைகளில் இருந்தும் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் மன்றம் மூலமாக இதுவரை 348 சிறுவர்கள், 161 சிறுமிகள் என மொத்தம் 509 பேர் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணை, மேட்டூர் அணை பூங்கா, ஏற்காடு, கொல்லிமலை, கிருஷ்ணகிரி அணை, ஒகேனக்கல் ஆகிய இடங்களுக்கு இன்ப சுற்றுலாவாக அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
அங்குள்ள அனைத்து இடங்களுக்கும் அழைத்து சென்று போலீசார் காண்பித்தனர். பின்னர் அனைவரையும் பத்திரமாக போலீசார் அழைத்து வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
- பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு
- பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்ப டும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று அனைத்து தாலுகாக்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதம் 2-வது சனிக்கிழமையான வருகிற 8-ந்தேதி ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.
முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்ப டும். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை அளித்து பயன டையலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா
- அடுத்த மாதம் 7-ந்தேதி சக்தி அழைப்பும், 9-ந்தேதி முதல் 11 -ந்தேதி பொங்கல், மாவிளக்கு பிரார்த்தனை
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டா டப்படுகிறது.
இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிப்படுவார்கள். இதைத்தவிர, கோவிலில் உருளுதண்டம், அக்னி கரகம், அலகு குத்தி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருவார்கள்.
கோவிலில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தால் கோவிலில் பொங்கல் வைபோகம் நிகழ்ச்சி மட்டுமே நடை பெற்று வருகிறது. தற்ேபாது கோவிலில் 85 சதவீத திருப்பணிகள் நிறை வடைந்துள்ளது.
இந்த நிலையில் நடப் பாண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு கோவிலில் வருகிற 25-ந்தேதி இரவு பூச்சாட்டுதல் விழா நடக்கிறது. இதையடுத்து அடுத்த மாதம் 7-ந்தேதி சக்தி அழைப்பும், 9-ந்தேதி முதல் 11 -ந்தேதி பொங்கல், மாவிளக்கு பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது.
15-ந்தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
இதேபோல் சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடித்திரு விழா முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.
- 16 வயதுடைய சிறுமி கள் 2 பேர் அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில்இருவரும் பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்த புறப்பட்டு சென்றவர்கள் மாலை வீடு திரும்பவில்லை.
- சேலம் மாநகரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து போலீசாருக்கும் இந்த தகவல் அளிக்கப்பட்டது.
சேலம்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி கள் 2 பேர் அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
நேற்று காலை சிறுமிகள் இருவரும் பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்த புறப்பட்டு சென்றவர்கள் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், மகள்களை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.
பின்னர், நேற்று இரவு இது குறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் சிறுமிகள் வைத்திருந்த செல்போனை கண்காணிக்க தொடங்கினர். அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் மாயமான சிறுமிகளின் செல்போனில் இருந்து, இன்ஸ்டாகிராமில் சேலத்தில் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து மாயமான சிறுமிகள் குறித்து சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சேலம் மாநகரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து போலீசாருக்கும் இந்த தகவல் அளிக்கப்பட்டது. இதனால் உஷாரான போலீசார், சேலம் முழுவதும் மாணவிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில், பள்ளப்பட்டி சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர்கள் சேகர் மற்றும் சண்முகம் ஆகியோர் ரோந்து பணியில் இருந்தபோது, அங்கிருந்த ஒரு ஹோட்டல் முன்பு நின்றிருந்த 2 சிறுமிகளையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் நாகர்கோவி லில் மாயமான சிறுமிகள் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 சிறுமைகளையும் பத்திரமாக மீட்ட போலீசார், இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துராஜா விற்கும், சிறுமிகளின் பெற்றோ ருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சிறுமிகளின் பெற்றோர்கள் மற்றும் போலீசார் சிறுமிகளை அழைத்துச் செல்ல சேலம் வந்து கொண்டி ருக்கிறார்கள். மேலும் இந்த சிறுமிகள் எதற்காக வீட்டிலிருந்து வெளியேறினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க தேசிய தேர்வு முகமையானது நுழைவுத் தேர்வு
- நடப்பாண்டு தேசிய தேர்வு முகமையானது ஜே.இ.இ. முதன்மை தேர்வை நடத்தியது.
சேலம்:
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க தேசிய தேர்வு முகமையானது நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. அதில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு நாட்டில் உள்ள சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அதன்படி நடப்பாண்டு தேசிய தேர்வு முகமையானது ஜே.இ.இ. முதன்மை தேர்வை நடத்தியது.
இதில் சேலம் அரசு மாதிரி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். அதில் 10 மாணவ- மாணவிகள் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று, அட்வான்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
அட்வான்ஸ் தேர்வில் வெற்றி பெறும் வகையில் இம்மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வந்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற அட்வான்ஸ் தேர்வில் சத்திய பிரியா, சாய்நாத், வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு என்.ஐ.டி., ஐ.ஐ.டி.யில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அதில் சிறப்பு திட்டங்களுடன் கூடிய அரசு மாதிரி பள்ளியும் ஒன்று. இதில் சேலத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் படித்த மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற ேஜ.இ.இ தேர்வில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2019-ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தி வரு கிறது.
- மாணவர்களுக்கு படிக்கும் காலத்தில் மத்திய அரசு சார்பில் பல்வேறு உதவி தொகைகள்
சேலம்:ஜிபேட் (கிராஜுவேட் பார்மசி ஆப்டிட்யூட் டெஸ்ட்) என்பது எம்.பார்ம் படிப்பில் நுழை வதற்கான அகில இந்திய அளவில் மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வா கும். இந்த நுழைவு தேர்வில் பங்கேற்பதற்கான கல்வி தகுதி பி.பார்ம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடந்த 2018 -ம் ஆண்டு வரை இந்த தேர்வை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் நடத்தியது. 2019-ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தி வரு கிறது.
ஜி பேட் தேர்வு 3 மணி நேர கணினி அடிப்படை யிலான ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. இதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்க அட்மிஷன் பெற லாம். மேலும் இம்மாண வர்களுக்கு படிக்கும் காலத்தில் மத்திய அரசு சார்பில் பல்வேறு உதவி தொகைகள் வழங்கப்படு கிறது.
இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான ஜிபேட் நுைழவு தேர்வு-2023 கடந்த மே மாதம் 22-ந்தேதி நாடு முழுவதும் 116 நகரங்களில் 221 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தேசிய தேர்வு முகமையால் நடத்தப் பட்டது. மொத்தம் 68,439 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 62,275 பேர் தேர்வில் பங்கேற்றனர். சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பி.பார்ம் பட்டதாரி கள் பலர் பங்கேற்று இந்த தேர்வை எழுதினர்.
அனைத்து மையங்களி லும் 4812 கேமராக்கள் மூலம் நேரடி சிசிடிவி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தேர்வு மையங்களில் 991 ஜாமர்கள் பொருத்தப்பட் டது. 235 பார்வையாளர்கள், 116 நகர ஒருங்கிணைப்பா ளர்கள், 18 பிராந்தியம் ஒருங்கிணைப்பாளர்கள், 2 தேசிய ஒருங்கிணைப்பா ளர்கள் மேற்பார்வையிட நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஜிபேட் நுழைவு தேர்வு முடிவு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி கொடுத்து தங்களது மதிப்பெண்களை பார்வையிடலாம். மேலும் அவற்றை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.






