என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் மாயமான 10-ம் வகுப்பு மாணவிகள் சேலத்தில் மீட்பு
    X

    நாகர்கோவிலில் மாயமான 10-ம் வகுப்பு மாணவிகள் சேலத்தில் மீட்பு

    • 16 வயதுடைய சிறுமி கள் 2 பேர் அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில்இருவரும் பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்த புறப்பட்டு சென்றவர்கள் மாலை வீடு திரும்பவில்லை.
    • சேலம் மாநகரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து போலீசாருக்கும் இந்த தகவல் அளிக்கப்பட்டது.

    சேலம்:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி கள் 2 பேர் அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

    நேற்று காலை சிறுமிகள் இருவரும் பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்த புறப்பட்டு சென்றவர்கள் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், மகள்களை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.

    பின்னர், நேற்று இரவு இது குறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் சிறுமிகள் வைத்திருந்த செல்போனை கண்காணிக்க தொடங்கினர். அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் மாயமான சிறுமிகளின் செல்போனில் இருந்து, இன்ஸ்டாகிராமில் சேலத்தில் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து மாயமான சிறுமிகள் குறித்து சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, சேலம் மாநகரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து போலீசாருக்கும் இந்த தகவல் அளிக்கப்பட்டது. இதனால் உஷாரான போலீசார், சேலம் முழுவதும் மாணவிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    அப்போது சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில், பள்ளப்பட்டி சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர்கள் சேகர் மற்றும் சண்முகம் ஆகியோர் ரோந்து பணியில் இருந்தபோது, அங்கிருந்த ஒரு ஹோட்டல் முன்பு நின்றிருந்த 2 சிறுமிகளையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் நாகர்கோவி லில் மாயமான சிறுமிகள் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 சிறுமைகளையும் பத்திரமாக மீட்ட போலீசார், இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துராஜா விற்கும், சிறுமிகளின் பெற்றோ ருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில், சிறுமிகளின் பெற்றோர்கள் மற்றும் போலீசார் சிறுமிகளை அழைத்துச் செல்ல சேலம் வந்து கொண்டி ருக்கிறார்கள். மேலும் இந்த சிறுமிகள் எதற்காக வீட்டிலிருந்து வெளியேறினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×