என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salemdistrictnews: சிறப்பு திட்டங்களுடன் கூடிய அரசு மாதிரி பள்ளியும் ஒன்று It is also a government model school with special programs"

    • ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க தேசிய தேர்வு முகமையானது நுழைவுத் தேர்வு
    • நடப்பாண்டு தேசிய தேர்வு முகமையானது ஜே.இ.இ. முதன்மை தேர்வை நடத்தியது.

    சேலம்:

    நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க தேசிய தேர்வு முகமையானது நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. அதில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு நாட்டில் உள்ள சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    அதன்படி நடப்பாண்டு தேசிய தேர்வு முகமையானது ஜே.இ.இ. முதன்மை தேர்வை நடத்தியது.

    இதில் சேலம் அரசு மாதிரி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். அதில் 10 மாணவ- மாணவிகள் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று, அட்வான்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

    அட்வான்ஸ் தேர்வில் வெற்றி பெறும் வகையில் இம்மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வந்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற அட்வான்ஸ் தேர்வில் சத்திய பிரியா, சாய்நாத், வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு என்.ஐ.டி., ஐ.ஐ.டி.யில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    அதில் சிறப்பு திட்டங்களுடன் கூடிய அரசு மாதிரி பள்ளியும் ஒன்று. இதில் சேலத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் படித்த மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற ேஜ.இ.இ தேர்வில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×