என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேரடி நியமனம்"

    • தமிழக ெதாடக்கக்கல்வி துறையில் வட்டார அளவில் பள்ளிகளை நிர்வகிக்க, வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
    • இதைத்தவிர போட்டித் தேர்வு மூலம் நேரடியாகவும் நிரப்பப்படுகிறது.

    சேலம்:

    தமிழக ெதாடக்கக்கல்வி துறையில் வட்டார அளவில் பள்ளிகளை நிர்வகிக்க, வட்டார கல்வி அலு வலர்கள் நியமிக்கப்படு கின்றனர். ஆசிரியர் களுக்கான பதவி உயர்வு மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

    இதைத்தவிர போட்டித் தேர்வு மூலம் நேரடியாகவும் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் நேரடி நியமனம் மூலம் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த மாதம் அறிவிப்பு வெளி யானது.

    கடந்த மாதம் 6-ந்தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக் கான தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வர்களுக்கும் தமிழில் 50 மதிப்பெண்ணுக்கும், பாடம் சார்ந்த தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடக்கிறது.

    இதற்காக விண்ணப்பிக்க இன்று (5-ந்தேதி) கடைசி நாளாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதனிடையே விண்ணப்பத்தை பதிவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருகிற 12-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் துள்ளது.

    ×