என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பி மனித நேயம் மலர வலியுறுத்தியும், தேவாலயங்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் சேலம் மறை மாவட்ட அனைத்து கிறிஸ்துவ அமைப்புகள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி சேலத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
- தொடர் கலவரத்தால் சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தொடர் கலவரத்தால் சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது.
இதில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதாக கூறியும், அங்கு அமைதி ஏற்படுத்த கோரியும் சேலம் மாவட்ட கிறிஸ்தவ பாதுகாப்பு அமைப்பு சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் சி.எஸ்.ஐ ஈரோடு சேலம் திருமண்டல செயலாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் ஏராள மானோர் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது, மணிப்பூரில் நடைபெற்று வரும் தொடர் கலவரத்தால் சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலயங்கள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ்கள் தீ வைத்து கொளுத்தப்படுகிறது. எனவே அங்கு நடைபெறும் மத கலவரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அமைதி பூங்காவாக மாற்ற வேண்டும். மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.






