சேலம் கிச்சிப்பாளையத்தில் கூலி தொழிலாளி சாவில் மர்மம் நீடிப்பு

ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் (வயது 42), கூலி தொழிலாளி குடிப்பழக்கம் கொண்டவர். சாதிக் வேலைக்கு சென்று விட்டு வரும்போது குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சேலம் கிச்சிப்பாளையத்தில் கூலி தொழிலாளி சாவில் மர்மம் நீடிப்பு
Published on

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகர் குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் (வயது 42), கூலி தொழிலாளி குடிப்பழக்கம் கொண்டவர். இவரது மனைவி ஹசினா (37), இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

சாதிக் வேலைக்கு சென்று விட்டு வரும்போது குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ஹசினா குழந்தைகளுடன் வெளியே சென்று விட்டு சிறிது நேரத்தில் பிறகு வீட்டிற்கு வந்தார்.

அப்போது சாதிக் துணியால் அவரது கழுத்தை நெறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஹசினா, சாதிக்கை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, தகவல் அறிந்த கிச்சிபாளையம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சாதிக் அவரே கழுத்தை நெரித்து தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கழுத்தை நெறித்து கொன்றார்களா? இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பிரேத பரிசோதனை முழு அறிக்கை வந்தால் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்ற விவரம் தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com