என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜிபேட் நுழைவு தேர்வு முடிவு வெளியானது
    X

    ஜிபேட் நுழைவு தேர்வு முடிவு வெளியானது

    • 2019-ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தி வரு கிறது.
    • மாணவர்களுக்கு படிக்கும் காலத்தில் மத்திய அரசு சார்பில் பல்வேறு உதவி தொகைகள்

    சேலம்:ஜிபேட் (கிராஜுவேட் பார்மசி ஆப்டிட்யூட் டெஸ்ட்) என்பது எம்.பார்ம் படிப்பில் நுழை வதற்கான அகில இந்திய அளவில் மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வா கும். இந்த நுழைவு தேர்வில் பங்கேற்பதற்கான கல்வி தகுதி பி.பார்ம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    கடந்த 2018 -ம் ஆண்டு வரை இந்த தேர்வை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் நடத்தியது. 2019-ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தி வரு கிறது.

    ஜி பேட் தேர்வு 3 மணி நேர கணினி அடிப்படை யிலான ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. இதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்க அட்மிஷன் பெற லாம். மேலும் இம்மாண வர்களுக்கு படிக்கும் காலத்தில் மத்திய அரசு சார்பில் பல்வேறு உதவி தொகைகள் வழங்கப்படு கிறது.

    இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான ஜிபேட் நுைழவு தேர்வு-2023 கடந்த மே மாதம் 22-ந்தேதி நாடு முழுவதும் 116 நகரங்களில் 221 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தேசிய தேர்வு முகமையால் நடத்தப் பட்டது. மொத்தம் 68,439 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 62,275 பேர் தேர்வில் பங்கேற்றனர். சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பி.பார்ம் பட்டதாரி கள் பலர் பங்கேற்று இந்த தேர்வை எழுதினர்.

    அனைத்து மையங்களி லும் 4812 கேமராக்கள் மூலம் நேரடி சிசிடிவி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தேர்வு மையங்களில் 991 ஜாமர்கள் பொருத்தப்பட் டது. 235 பார்வையாளர்கள், 116 நகர ஒருங்கிணைப்பா ளர்கள், 18 பிராந்தியம் ஒருங்கிணைப்பாளர்கள், 2 தேசிய ஒருங்கிணைப்பா ளர்கள் மேற்பார்வையிட நியமிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஜிபேட் நுழைவு தேர்வு முடிவு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி கொடுத்து தங்களது மதிப்பெண்களை பார்வையிடலாம். மேலும் அவற்றை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×