என் மலர்
ராணிப்பேட்டை
- கடன்பிரச்னை காரணமா?
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த புதிய அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் மணி இவரது மனைவி கீதா (வயது 45). இவர் சிப்காட் மலைமேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கீதா தனியார் நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றிருந்ததாகவும், மேலும் கடனை கட்ட முடியாததால் மன வேதனையில் இருந்துள்ளார்.
இதனால் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவலறிந்த சிப்காட் போலீசார் கீதா கடன்பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 38). இவர் வேலூரில் உள்ள சுவீட் கடை ஒன்றில் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி உஷா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இறந்து விட்டார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசை வார்த்தைக்கூறி தனது வீட்டிற்கு வரவழைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர்.
அப்போது நடந்ததை கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைதொடர்ந்து போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மோகன்தாசை கைது செய்தனர்.
- சோளிங்கர் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
- பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட உளியநல்லூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகமும், ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா சதாசிவம் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள், ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்தினம் கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி,பிரபாகரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்னுரங்கம், ஒன்றிய கவுன்சிலர் கவுரி வேலாயுதம், மாவட்ட பிரதிநிதி சம்பத், கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், மணி, ஜெயக்குமார், காங்கிரஸ் நெமிலி ஒன்றிய தலைவர் நந்தகுமார், துணைத்தலைவர் கீழ்வீதி பாலாஜி, வேலு உட்பட கலந்து கொண்டனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளி திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி , திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்து பேசினார்.
விழாவில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சைக்காரன், நகரமன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. கவுன்சிலர் குற்றச்சாட்டு
- அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது
அரக்கோணம்:
அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் நிர்மலா சவுந்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்வதிர்க்கான் பேட்டை ஊராட்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலர் குமார் பேசுகையில்:-
100 நாள் வேலையில் பல முறைகேடுகள் நடப்பதாக ஆவேசமாக கூறினார்.
ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் இந்த முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ரவிச்சந்திரன், சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- மின் கட்டணத்திற்கான 430 சதவீத நிலை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்
- மாவட்ட பொதுச்செயலாளர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை எம்மரிங் லெதர் தொழில்கள் சங்கம் , பெருந்தலைவர் காமராஜர் குறுந்தொழில்கள் சங்கம், பெல் சப்ளையர்ஸ் அசோசியேஷன், பெல் ஆன்சிலரி அசோசியேசன் அரக்கோணம் சிட்கோ மேனுஃபேக்சரர்ஸ் அசோசியேசன், ராணிப்பேட்டை சாமில் ஓனர் அசோசியேஷன், அம்மூர் நெல் அரிசி வியாபாரிகள் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டண உயர்வு செய்துள்ள நிலை கட்டணம், பரபரப்பு நேர கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் அனைத்து கடைகளும் மூடப்பட்டது.
முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து ராணிப்பேட்டை சிப்காட் , சோளிங்கர் அரக்கோணம் திமிரி மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன எனவும், மின் கட்டணத்திற்கான 430 சதவீத நிலை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே உண்ணாவிரதம், கோரிக்கை , மின்னஞ்சல், ஸ்பீட் போஸ்ட் மனுக்கள் அனுப்புதல் ஆகிய போராட்டங்களில் ஈடுப்பட்டனர்.
இருப்பினும் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவதாக ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் முரளி தெரிவித்தார்.
- 100 கிலோ சிக்கியது
- வேலூர் டிரைவர் கைது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் வாலாஜா போலீசார் நேற்று வாலாஜா- பாலாறு அணைக்கட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினிவேன் ஒன்று போலீசாரை பார்த்ததும் நிற்காமல் சென்றது. இதை பார்த்த போலீசார் வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பிடித்து நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 6 அட்டை பெட்டிகளில் சுமார் 100 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது. வேலூரில் இருந்து எடுத்து வந்து கிராமப்புறங்களில் உள்ள பங்கடைகளில் விநியோகம் செய்ய வந்ததும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் மினிவேனுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். வேன் டிரைவர் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஜெய்கணேஷ் (வயது 45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டது
கலவை:
மேல்விஷாரம் நகராட்சியில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில் அஞ்சுமன் தெரு மற்றும் பெரிய மசுதி தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.
இதற்கான கல்வெட்டினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
இதில் கலெக்டர் வளர்மதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, நகரமன்றத் தலைவர் முஹமது ஹமீன், துணைத் தலைவர் குல்ஜார் அஹமது, நகராட்சி ஆணையாளர் (பொ) சந்தானம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்
- 6 வருடங்களாக காதலித்து வந்தனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த மானாமதுரை கிராமத்தில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவரின் மகன் அரிகிருஷ்ணன்(28).எம்.காம் படித்துவிட்டு தற்போது தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இவரும் காஞ்சிபுரம் மாவட்டம், வேளியூர் கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டன் மகள் சாந்தி(23) என்பவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.
வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் தங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் நேற்று நெமிலி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். தொடர்ந்து நெமிலி போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விழுக்கண் மற்றும் மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். போலீஸ் நிலையங்களில் புதியதாக பதிவான வழக்குகள் , நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடப்பு மாதம் எவ்வித வழக்கும் நிலுவையிலோ, புதியதாகவோ பதிவாகவில்லை என்பதை குறிப்பிட்டு இது தொடர்புடைய வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வரும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு குழு உறுப்பினர் முன்னிலையில் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் வழக்கு தொடர்புடைய ஆவணங்களான சாதிச் சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்கள் மற்றும் சேதமதிப்பீடு சான்றிதழ்கள் போன்றவை ஏதும் நிலுவையில் உள்ளதா எனவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக ஏதேனும் குற்றச்செயல்கள் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறதா? என்பது குறித்து குழுஉறுப்பினர்களிடம் கேட்டறிந்தார். கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, உதவி கலெக்டர் வினோத்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, துணை போலீஸ்சூப்பிரண்டு பிரபு, குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், ரமேஷ் கர்ணா, ஜெயகுமார், ரமேஷ்,சீனிவாசன்,மஞ்சு, கவிதா உள்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த ஓச்சலம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் மோகன் (வயது 24), டிராக்டர் டிரைவர். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மோகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு மோகன் குடிபோதையில் வீட்டுக் குவந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மோகன் சம்பவதன்று நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார்.
அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- தந்ைதயை கும்பல் தாக்கிய நிலையில் பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் விண்ட ர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தனசேகர் என்கிற குட்டியப்பா (வயது 43). இவரது மகன் ஸ்ரீநாத் (16). இவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
தந்தை மீது தாக்குதல்
இந்த நிலையில் ஸ்ரீநாத் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் பழகி வந்துள்ளார். பகல் நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்து அவர்களுடன் பொழுதை கழித்து வந்தார்.
இதனைப் பார்த்த தனசேகர், தனது மகன் ஸ்ரீநாத்தை கண்டித்து, வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அப்போது ஸ்ரீநாத் உடன் இருந்த இளைஞர்கள் தகராறு செய்தனர்.
தனசேகரை பிளேடால் ஆங்காங்கே வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த தனசேகர் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு. சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஸ்ரீநாத் தனது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கி னார்.
இதனை பார்த்த தனசேகரன் மகன் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து அந்த பகுதி மக்கள் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விண்டர்பேட்டை பகுதியில் கஞ்சா கும்பல் அட்டகாசம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.






