என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Discussion of cases"

    • நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விழுக்கண் மற்றும் மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். போலீஸ் நிலையங்களில் புதியதாக பதிவான வழக்குகள் , நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடப்பு மாதம் எவ்வித வழக்கும் நிலுவையிலோ, புதியதாகவோ பதிவாகவில்லை என்பதை குறிப்பிட்டு இது தொடர்புடைய வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வரும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு குழு உறுப்பினர் முன்னிலையில் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

    மேலும் வழக்கு தொடர்புடைய ஆவணங்களான சாதிச் சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்கள் மற்றும் சேதமதிப்பீடு சான்றிதழ்கள் போன்றவை ஏதும் நிலுவையில் உள்ளதா எனவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக ஏதேனும் குற்றச்செயல்கள் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறதா? என்பது குறித்து குழுஉறுப்பினர்களிடம் கேட்டறிந்தார். கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, உதவி கலெக்டர் வினோத்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, துணை போலீஸ்சூப்பிரண்டு பிரபு, குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், ரமேஷ் கர்ணா, ஜெயகுமார், ரமேஷ்,சீனிவாசன்,மஞ்சு, கவிதா உள்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    ×