என் மலர்
ராணிப்பேட்டை
- வினாடிக்கு 1350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
- நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வாலாஜா அருகே உள்ள பாலாறு அணைக்கட்டு தடுப்ப ணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் பாலாறு அணைக்கட்டில் நீர் தேங்கி பரந்து விரிந்து கடல் போல்காட்சி அளிக்கிறது.
நீர் வரத்து அதிக ரித்துள்ளதை தொடர்ந்து பாலாறு அணைக்கட்டு தடுப்பணையிலிருந்து பாசன கால்வாய்கள் மூலம் வினாடிக்கு 1350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன்படி காவேரிப்பாக்கம் பெரிய ஏரிக்கு 280 கன அடி, மகேந்திரவாடி ஏரிக்கு 268 கன அடி, சக்கரமல்லூர் ஏரிக்கு 110 கன அடி, தூசி ஏரிக்கு 692 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- தோல் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நசீப் கான் (வயது 22) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம்போல் நசீப் கான் பணியில் ஈடுபட்டிருந்த போது தொழிற்சாலை இயந்திரத்தை இயக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட நசீப்கான் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நசீப்கான் வரும் வழியி லேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சு.ரவி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே குருராஜபேட்டையில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் ஜி.இ.செல்வம் தலைமை தாங்கினார். அ.தி.மு.க ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
அப்போது ஒன்றிய செயலாளர்கள் பழனி, பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- கோவிந்தா என கோஷத்துடன் பக்தர்கள் வணங்கினர்
- சர்வ அலங்காரம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தப்பட்டது
அரக்கோணம்:
அரக்கோணம் பஜார் பகுதியில் உள்ள பக்தர்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையில் திருப்பதிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு 12-வது ஆண்டாக பாதயாத்திரை செல்கின்றனர்.
முன்னதாக ஸ்ரீதிருப்பதி திருமலை பாதயாத்திரை குழுவினர் சார்பாக ஸ்ரீசீனிவாச பெருமாள் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி 1008 லட்டுகள் கொண்டு உருவாக்கப்பட்ட மாலை அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா என கோஷம் எழுப்பி பெருமாளை வணங்கினர். 1008 லட்டுகளால் உருவாக்கப்பட்ட மாலையில் உள்ள ஸ்ரீசீனிவாச பெருமாளை திரளான பக்தர்கள் வியப்புடன் பார்த்து வணங்கி சென்றனர்கள்.
- டி.ஐ.ஜி. வழங்கினார்
- 36 மனுக்கள் பெறப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
\கூட்டத்திற்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மொத்தம் 36 மனுக்கள் பெற்று, மனுக்களின் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வே ஸ்வரய்யா, குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் நடைபெற்ற மாதாந்திர சரக குற்றகலந்தாய்வு கூட்டத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, விநாயகர் சதுர்த்தி விழா எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனை களின்றி அமைதியாக நடந்தமைக்காக போலீஸ் சூப்பிரண்டுகள் வேலூர் மணிவண்ணன், திருவண்ணாமலை கார்த்திகேயன், திருப்பத்தூர் ஆல்பர்ட் ஜான், ராணிப்பேட்டை கிரண் ஸ்ருதி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
- நெமிலி ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்
- பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார்
காவேரிப்பாக்கம்:
நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம் ஊராட்சியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றதலைவர் பவானி வடிவேலு தலைமை தாங்கினார்.
முன்னதாக சயனபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 15-வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கான கழிவறை கட்டிடம் கட்டும்பணியும், அரசினர் மேல்நிலை பள்ளியில் 15-வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கான கழிவறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுகன்யா ரவி,
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.4 கோடியே 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது
- குடியிருப்பு வளாகத்தையும் பார்வையிட்டார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலையம் ஆர்.எஸ்.ரோட்டில் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ராணிப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி தற்போது பணிகள் முடிவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
கட்டி முடிக்கப்பட்ட புதிய தீயணைப்பு நிலையத்தினை தமிழ்நாடு போலீஸ் வீட்டுவசதி வாரிய கழக டி.ஜி.பி. விஸ்வநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இதன் அருகில் 14 ஆயிரத்து 454 சதுரடியில் ரூ.4 கோடியே 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வளாகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் லஷ்மி நாராயணன், உதவி மாவட்ட அலுவலர்கள் திருமுருகன், பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- தோல் தொழிற்சாலையில் பணியின்போது பரிதாபம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் ஐ.ஓ.பி.நகர் ராகவேந் திராகோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் காந்தி (வயது 45). தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று சுரேஷ்காந்தி வழக்கம் போல பணியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது எந்திரத்தை இயக்கினார். திடீரென அதில் இருந்து மின்கசிவு ஏற்பட்டது. அதில் இருந்த மின் சாரம் பாய்ந்து சுரேஷ் காந்தி தூக்கி வீசப்பட்டார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது, சுரேஷ்காந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் உத்தரவு
- காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடவடிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சி களிலும் காந்தி ஜெயந்தி முன்னிட்டு வருகிற 2-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபைக்கூ ட்டங்கள் தவறாமல் நடத்தப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செல வினம் குறித்து விவாதித்தல் வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் உள்பட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்கா ணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு ள்ளார்கள்.
மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார்.
- மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது
- 127 பேர் கலந்துகொண்டனர்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வட்டார வளமைய அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலம் மற்றும் கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன், பள்ளிக்கல்வி துறை உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மொத்தம் 127 பேர் கலந்துகொண்டனர். இதில் மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை 79 பேருக்கு வழங்கப்பட்டது.
மேலும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கோரி 57 பேரும், மருத்துவ காப்பீடுக்கோரி 36 பேரும், பராமரிப்பு நிதியுதவி வழங்கக்கோரி 35 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கக்கோரி 17 பேரும் பதிவு செய்தனர்.
இதில் வட்டார கல்வி அலுவலர் பவானந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த், மேற்பார்வையாளர் அப்பாஸ் அலி, ஆசிரியர் பயிற்றுனர்கள் நிஷாந்த், ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடவடிக்கை
- கலெக்டர் அறிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூ டங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஒட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நாளை 28-ந்தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி மற்றும் வருகிற அக்டோபர் 2-ம் தேதி (திங்கள் கிழமை) காந்தி ஜெயந்தி நாட்களில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும். அந்த நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கூடாது.
விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல், மதுக்கூட உரிமை தாரர்கள் மீது நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
- அமைச்சர் ஆர்.காந்தி குத்து விளக்கேற்றி ெதாடங்கி வைத்தார்
- முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சிமூலம் திறந்து வைத்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 அரசுப் பள்ளிகளில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3கோடியே 67 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொளி காட்சிமூலம் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து ராணிப்பேட்டை அடுத்த வி.சி. மோட்டுர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல் அமைச்சர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இணையாக முன்னேற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளையும், பழுதடைந்த பழைய பள்ளிக் கட்டிடங்களை அகற்றி பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் சேஷாவெங்கட், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் கடப்பேரி சண்முகம்,ஊராட்சி மன்றத் தலைவர் முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






