என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பாராட்டு சான்றிதழ்
    X

    போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பாராட்டு சான்றிதழ்

    • டி.ஐ.ஜி. வழங்கினார்
    • 36 மனுக்கள் பெறப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

    -கூட்டத்திற்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மொத்தம் 36 மனுக்கள் பெற்று, மனுக்களின் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வே ஸ்வரய்யா, குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் நடைபெற்ற மாதாந்திர சரக குற்றகலந்தாய்வு கூட்டத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, விநாயகர் சதுர்த்தி விழா எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனை களின்றி அமைதியாக நடந்தமைக்காக போலீஸ் சூப்பிரண்டுகள் வேலூர் மணிவண்ணன், திருவண்ணாமலை கார்த்திகேயன், திருப்பத்தூர் ஆல்பர்ட் ஜான், ராணிப்பேட்டை கிரண் ஸ்ருதி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    இதில் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×