என் மலர்
நீங்கள் தேடியது "There is a boarding school"
- அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளி திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி , திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்து பேசினார்.
விழாவில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சைக்காரன், நகரமன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெண் கல்வி சேவையில் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- அதற்கான ஆதாரம் இணைக்கப்பட வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள 12 ஒன்றியங்களில் 13 கஸ்துரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
13 கே.ஜி.பி.வி. பள்ளிகளில் கொளத்தூர் ஒன்றியம், நீதிபுரம் கே.ஜி.பி.வி. பள்ளி, எடப்பாடி ஒன்றியம், சித்தூர் கே.ஜி.பி.வி. ஆகிய பள்ளிகளில் காலியாக உள்ள 2 கே.ஜி.பி.வி. உண்டு உறைவிடப்பள்ளிகளை நிர்வகிக்க அனுபவம் மற்றும் பெண் கல்வியில் ஆர்வமுள்ள பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்து ருக்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் Indian Societies Act, 1860/Trust Act - ன் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் Darpan Portal - இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பெண் கல்வி சேவையில் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான ஆதாரம் இணைக்கப்பட வேண்டும். தங்கள் தொண்டு நிறுவனம் எவ்வித புகாருக்கும் உட்பட்டு இருக்கக் கூடாது.
மேலும், மூன்றாண்டுகள் வரவு செலவு தணிக்கை செய்த விவரம் கருத்துருக்களுடன் இணைக்க வேண்டும். வருமான வரித்துறையின் டி.டி.எஸ். சான்றிதழ் இணைக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு கருத்துருக்களை வருகிற 28-ந்தேதி மாலை 5 மணிக்குள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் வந்து சேரும்வகையில் அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.






