என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள்
    • முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து ரூ.10 லட்சம் செலவில் அதிநவீன ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை கட்டித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சோளிங்கர் சித்தூர் சாலையில் அமைந்துள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்களும், உறுப்பினர் ஏ எம் முன்னிரத்தினம் எம்.எல்.ஏ ஆகியோர் பள்ளியில் படித்ததின் நினைவாக இப்பள்ளியை தரம் உயர்த்தும் முயற்சியில் சுமார் பத்து லட்ச ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டம் பணி நடைபெற்றது இதில் முன்னாள் மாணவர்கள் குழு சேர்ந்த செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணா லேப் திருமூர்த்தி மற்றும் டி.கோபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    • கணவன் மனைவி கைது
    • கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சங்கர் நகரை சேர்ந்தவர் கெங்காபாய் (வயது 70).

    இவர் 2 நாட்களுக்கு முன்பு பெரியமலை அடிவாரத்தில் உள்ள அன்னதானம் கூடத்தில் சாப்பிட சென்றார். அங்கு குழந்தையுடன் கணவன் மனைவி இருந்தனர். அவர்கள் கெங்காபாயிடம் பேச்சு கொடுத்தனர்.

    அப்போது கெங்காபாய் தான் தனியாக வசித்து வருவதாக கூறினார்.

    பிறகு கணவனும் மனைவியும் மூதாட்டியை வீட்டில் விடுவதாக கூறி மூதாட்டியை ஒரு பைக்கில் அழைத்து சென்று வீட்டில் விட்டனர். தொடர்ந்து அசதியாக உள்ளது. சிறிது படுத்துக்கொள்கிறோம் நீங்களும் படுத்துங்கொள்ளுங்கள் என தெரிவித்தனர்.

    திடீரென தம்பதியினர் கெங்காபாய் வாயில் துணியால் அடைத்து விட்டு கைகளை கட்டி போட்டனர். கழுத்தில் இருந்த 5 பவுன் செயின் பறித்து கொண்டு வீட்டின் வெளிப்புறம் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

    மூதாட்டி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர். மூதாட்டியை காப்பாற்றினர். இது குறித்து மூதாட்டி சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    நகை பறித்த தம்பதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் கொண்ட பாளையம், சங்கர் நகர், கருமாரியம்மன் கூட்டு சாலை பகுதியில் காவல் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது வீடியோ பதிவில் இருச்சக்கர வாகனத்தில் மூதாட்டியை ஏற்றி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பைக் பதிவு எண் வைத்து நகை பறித்த தம்பதியை அடையாளம் கண்டனர்.

    அவர்கள் சோளிங்கர் தலங்கை சின்னத்தெருவை சேர்ந்த சரவணன் (29) அவரது மனைவி பூங்கொடி (28) என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில் மூதாட்டியிடம் பறித்த நகையை வாலாஜாவில் அடகு வைதத்தது தெரியவந்தது.

    போலீசார் நகையை மீட்டனர். இது குறித்து வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் சரவணனையும் பெண்கள் சிறையில் பூங்கொடியும் அடைக்கப்பட்டனர்.

    • ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • தனது பாட்டி வீட்டிற்கு பழனி பேட்டை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் எட்வின். ரெயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். இவரது இளைய மகன் இமானுவேல்(வயது 23). காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    அரக்கோணத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று இரவு நேர பணி என்பதால் பணிக்கு சென்று விட்டு நள்ளிரவு 1.30மணியளவில் தனியார் கம்பெனி பஸ் மூலமாக அரக்கோணம் எஸ்.ஆர் .கேட் பகுதியில் இறங்கினார். அங்கிருந்து தனது பாட்டி வீட்டிற்கு பழனி பேட்டை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் பின்னால் வந்து கத்தியால் வெட்டியுள்ளார்‌. இதில் நிலை தடுமாறிய இமானுவேல் தப்பி ஓடியுள்ளார்.

    அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று கழுத்து வயிறு போன்ற இடங்களில் வெட்டியுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த இமானுவேல் மீன் மார்க்கெட் அருகே ரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்தார்.

    நேற்று இரவு அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் இமானுவேல் பிணமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணத்தில் இரவு நேர பணி முடிந்து வந்த தொழிலாளி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில்;

    செல்போன் நிறுவன தொழிலாளி முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டதாக தெரியவில்லை.வேறு ஏதோ காரணம் உள்ளது. இரவு நேரங்களில் பணிக்கு செல்பவர்கள் போலீஸ் உதவி ஆப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அரக்கோணம் பகுதியில் இரவு ரோந்து கூடுதலாக தீவிர படுத்தப்படும் என்றார்.

    • தரைபாலத்தின் தடுப்பு சுவரில் இருந்து கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் , சிப்காட் அருகே உள்ள லாலா பேட்டைபகுதியை சேர்ந்தவர் தனசேகர் ( வயது 42 ).

    வெல்டிங் செய்யும் தொழிலாளி இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 9 - ந் தேதி லாலாபேட்டை தக்காம்பாளையம் சாலையில் உள்ள அரசு மதுபான கடை அருகே உள்ள தரைப்பாலத்தின் தடுப்பு சுவரின் மேலிருந்து தனசேகர் கால்வாயில் தவறி விழுந்து இறந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றிவாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர் .

    • அங்கன்வாடி மையத்தில் சத்துணவை தரமாக தயாரிக்க உத்தரவு
    • அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் குட்டியம் ஊராட்சியில் 100 நாள் வேலை பணியாளர்களைக்கொண்டு பண்ணை குட்டை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது .

    இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் சென்னசமுத்திரம் ஊராட்சியில் உள்ள அங் கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து இதைவிட நன்றாக உணவு சமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    அப்போது திட்ட இயக்குனர் லோகநாயகி, தாசில்தார் ஷமீம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
    • பராமரிப்பு பணியால் நடவடிக்கை

    ஆற்காடு :

    ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டு தாக்கு, ஆனை மல்லூர், தாமரைப்பாக்கம் புதுப்பாடி ஆகிய துணை மின் நிலையங்கள் வருகிற நாளை மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை ஆற்காடு டவுன், ஹவுசிங் போர்டு, வேப்பூர், விசாரம் நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்பு பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, 30 வெட்டி தாஜ்புரா, தக்காண்குளம், களர், கத்திய வாடி கீழ்குப்பம், அருங் குன்றம், ஆயிலம் புதூர், ராமாபுரம், பூட்டுத்தாக்கு, ரத்தினகிரி, கன்னிகாபுரம், சனார் பண்டை மேல குப்பம், கீழ் செங்காநத்தம், மேல் செங்காநத்தம் மற்றும் திமிரி, விளாப் பாக்கம், காவனூர், சாத்தூர், தாமரைப்பாக்கம், வளையாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடப்பந்தாங்கல், கிளம்பாடி, சின்ன குக்கூண்டி, கீராம்பாடி, பெரிய குக்கூண்டி, புதுப்பாடி, மாங்காடு லாடாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    • குப்பைகளை அரைத்து இயற்கை உரமாக தயாரிப்பு
    • மக்கும், மக்காத குப்பைகள் வாரியாக பிரிப்பு

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்கு உட் பட்ட 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து ஜெயம் நகரில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    அங்கு மக்கும் குப்பைகளை அரைத்து இயற்கை உரமாக தயாரிக்கப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் நேற்று ஆற்காடு நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில் துப்புரவு அலுவலர் பாஸ்கர், துப் புரவு ஆய்வாளர் முருகன், தூய்மை பாரத இயக்க பரப்புரை யாளர் மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர் பிரேம்நாத் ஆகியோர் முன்னிலையில் ஆற்காட்டை சேர்ந்த விஜயன் என்பவருக்கு ஒரு கிலோ உரம் ரூ .2 வீதம் ஆயிரம் கிலோ விற் பனை செய்யப்பட்டது .

    • 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது
    • 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது

    ராணிப்பேட்டை:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு பார்வையிட ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு செஸ் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வட்டார அளவில் 116 அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 13.07.2022 முதல் 15.07.2022 வரை 1-5 ம் வகுப்பு வரை , 6 - 8 ம் வகுப்பு வரை 9:10 ம் வகுப்பு மற்றும் 11-12 ம் வகுப்பு ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது .

    இதில் 1-ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி அளவில் மட்டும் போட்டிகள் நடத்தப்பட்டது.

    6 -ம் வகுப்பு முதல் 8- ம் வகுப்பு வரை . 9.10 -ம் வகுப்பு மற்றும் 11.12 -ம் வகுப்பு என மூன்று பிரிவுகளில் பள்ளி அளவில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்கள் தனித்தனியே வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள்.

    வட்டார அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் 6-12 -ம் வகுப்பு வரை 3 பிரிவுகளில் தனித்தனியே மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர் .

    இப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் 2 இடங்களைப் பெறும் 6 -ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் 2 பேர் மாநில அளவிலான பயிற்சி முகாம் மற்றும் போட்டிகளில் கலந்து கொள்வர்.

    மாவட்ட அளவில் முதல்2 இடங்களை பெறும் 9.10 மற்றும் 11.12 -ம் வகுப்பு ஆகிய இரு பிரிவு மாணவ , மாணவியர்கள் மகாபலிபுரத்தில் நடக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை 7.08.2022 அன்று பார்வையிட செல்வார்கள் என தெரிவித்துள்ளனர்.

    • குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை
    • போலீசார் எச்சரிக்கை

    அரக்கோணம்:

    அரக்கோணம் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதால் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன் உத்தரவின் பேரில் அரக்கோணம் கலால் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    அரக்கோணம் சுற்றி உள்ள பகுதிகளில் கல்லூரி பள்ளி மாணவர்களை குறி வைத்து சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் வருவதால் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

    மேலும் கஞ்சாவிற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் தயக்கம் காட்டக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அரக்கோணம் பகுதிகளில் கஞ்சா விற்பனை தடுப்பதற்கான பெரும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருவதால் இந்தப் பகுதிகளில் கஞ்சா விற்பனை இனி இருக்காது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • வியாபாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
    • மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார். பின்னர் பிளாஸ்டிக் பயன்பாடு தீமைகள் குறித்தும் கட்டுரை கவிதை ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    அப்ேபாது பேசிய அவர் தற்போது பிளாஸ்டிக் பய ன்படு த்துவதை தடுப்பது மிகவும் கடினமாக உள்ளது என்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மனித இயற்கையை சீர்குலைக்கும் ஒன்று என்றும் எதிர்காலத்தில் இந்த பிளாஸ்டிக் கால் பெரும் தீமைகளை மக்கள் சந்திக்க இருக்கும் என்றும் பிளாஸ்டிக் என்று எடுத்து கூறி விழிப்புணர்வு எற்படுத்தினர்.

    தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் நபர்கள் மீது ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அதையும் மீறும் பட்சத்தில் கைதி ெசய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வியா பாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நி கழ்ச்சியில் சப் கலெக்டர் பாத்திமா நகராட்சி கமிஷனர் லதா சேர்மன் லட்சுமி துணை சேர்மன் கலாவதி சமூக பாதுகாப்பு தாசில்தார் சுமதி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவா அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கொடூரம்
    • வேலூர் சிறையில் அடைத்தனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்குமார்.இவரது மகன் சரத்குமார் (22) இவர் மீது பாணாவரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்குகளில் கைதாகி சிறை சென்ற அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்ஜாமினில் வந்தார்.தினமும் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு வீட்டிற்கு வந்த 3 பேர் திருவள்ளூர் போலீசார் எனவும் வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறி சரத்குமாரை அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் 10ம் காலையில் பாணாவரம் அடுத்த புதூர் மலைமேடு பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே சரத்குமார் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு மற்றும் பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நித்யா என்ற ரவுடிக்கும் பாணாவரம் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் முகாமில் வசிக்கும் கிளிண்டன் மூலம் நித்யாவை கடந்த ஆண்டு வரவழைத்த வினோத் குமார் அவரை கொலை செய்துள்ளார்.

    இதனையடுத்து கிளிண்டன் வினோத்குமாருக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லப் போவதாக கூறியுள்ளார். இதனால் கடந்த மாதம் 18ம் தேதி கிளிண்டனை வினோத்குமார் தரப்பினர் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது கிளிண்டனின் நண்பரான சரத்குமார் அங்கு வந்தார். இதனால் வினோத்குமார் தரப்பினர் தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் சரத்குமாருக்கு தெரிந்து விட்டதால் அவரையும் தீர்த்து கட்ட வினோத்குமார் தரப்பினர் திட்டமிட்டு உள்ளனர்.

    அதன்படி கடந்த மாதம் 20ம் தேதி வீரராகவபுரத்தில் சரத்குமாரை வினோத்குமார், வண்டு என்கிற ராஜேஷ், கீழ் வீராணம் ராமச்சந்திரன், தாளிக்கால் முருகேசன், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் குடியிருப்பச் சேர்ந்த பில்லா என்கிற சூர்யா ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் சரத்குமாரை கொலை செய்ய முயற்சி செய்தனர்.இதில் படுகாயம் அடைந்த சரத்குமார் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    அதேபோல் கிளிண்டனும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சரத்குமாரை வெட்டிய வழக்கில் வினோத்குமார், வண்டு என்கிற ராஜேஷ் ஆகிய 2 பேரும் வாலாஜா கோர்ட்டில் சரணடைந்தனர்.

    அவர்களை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் முருகேசன் என்பவரை பாணாவரம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பில்லா என்கிற சூர்யா, கீழ்வேராணம் ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருவதும் தெரிய வந்தது.

    இந்நிலையில் சரத்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, மணிமாறன், முனிஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் ஏற்கனவே எஸ்எஸ்ஐ குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசரும் விசாரணை நடத்துகின்றனர். இந்தநிலையில் தலைமறை வாக இருந்த கீழ்வீராணம் பகுதியை சேந்ந்த ராமசந்திரன் ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீஸார் தீவிர வேட்டையில் கீழ்வீராணம் மோட்டூர் பகுதியை சேர்ந்த சரவணகுமார் (38), காஞ்சிபுரம் சேர்ந்த லூவி அரசன் (29) திருவண்ணாமலை சேர்ந்த ராஜா (34) ஆகியோரை கைது செய்து வாலாஜா கோட்டுடில் நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
    • துண்டுபிரசுரம் விநியோகம்

    அரக்ேகாணம்:

    அரக்கோணம் நகராட்சியில் "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. இதில் நகராட்சி சேர்மன் லட்சுமி ஆணையாளர் லதா துணைத்தலைவர் கலாவதி கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணி தொடங்குவதற்கு முன்பாக அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்தப் பேரணி பழைய பஸ் நிலையம் சென்றடைந்தது.

    அப்போது பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் விழிப்புணர்வுக்கான வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

    ×