என் மலர்
நீங்கள் தேடியது "They saved the old lady."
- கணவன் மனைவி கைது
- கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சங்கர் நகரை சேர்ந்தவர் கெங்காபாய் (வயது 70).
இவர் 2 நாட்களுக்கு முன்பு பெரியமலை அடிவாரத்தில் உள்ள அன்னதானம் கூடத்தில் சாப்பிட சென்றார். அங்கு குழந்தையுடன் கணவன் மனைவி இருந்தனர். அவர்கள் கெங்காபாயிடம் பேச்சு கொடுத்தனர்.
அப்போது கெங்காபாய் தான் தனியாக வசித்து வருவதாக கூறினார்.
பிறகு கணவனும் மனைவியும் மூதாட்டியை வீட்டில் விடுவதாக கூறி மூதாட்டியை ஒரு பைக்கில் அழைத்து சென்று வீட்டில் விட்டனர். தொடர்ந்து அசதியாக உள்ளது. சிறிது படுத்துக்கொள்கிறோம் நீங்களும் படுத்துங்கொள்ளுங்கள் என தெரிவித்தனர்.
திடீரென தம்பதியினர் கெங்காபாய் வாயில் துணியால் அடைத்து விட்டு கைகளை கட்டி போட்டனர். கழுத்தில் இருந்த 5 பவுன் செயின் பறித்து கொண்டு வீட்டின் வெளிப்புறம் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
மூதாட்டி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர். மூதாட்டியை காப்பாற்றினர். இது குறித்து மூதாட்டி சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
நகை பறித்த தம்பதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் கொண்ட பாளையம், சங்கர் நகர், கருமாரியம்மன் கூட்டு சாலை பகுதியில் காவல் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது வீடியோ பதிவில் இருச்சக்கர வாகனத்தில் மூதாட்டியை ஏற்றி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பைக் பதிவு எண் வைத்து நகை பறித்த தம்பதியை அடையாளம் கண்டனர்.
அவர்கள் சோளிங்கர் தலங்கை சின்னத்தெருவை சேர்ந்த சரவணன் (29) அவரது மனைவி பூங்கொடி (28) என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில் மூதாட்டியிடம் பறித்த நகையை வாலாஜாவில் அடகு வைதத்தது தெரியவந்தது.
போலீசார் நகையை மீட்டனர். இது குறித்து வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் சரவணனையும் பெண்கள் சிறையில் பூங்கொடியும் அடைக்கப்பட்டனர்.






