என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் கொலையில் 3 பேர் கைது
    X

    வாலிபர் கொலையில் 3 பேர் கைது

    • துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கொடூரம்
    • வேலூர் சிறையில் அடைத்தனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்குமார்.இவரது மகன் சரத்குமார் (22) இவர் மீது பாணாவரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்குகளில் கைதாகி சிறை சென்ற அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்ஜாமினில் வந்தார்.தினமும் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு வீட்டிற்கு வந்த 3 பேர் திருவள்ளூர் போலீசார் எனவும் வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறி சரத்குமாரை அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் 10ம் காலையில் பாணாவரம் அடுத்த புதூர் மலைமேடு பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே சரத்குமார் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு மற்றும் பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நித்யா என்ற ரவுடிக்கும் பாணாவரம் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் முகாமில் வசிக்கும் கிளிண்டன் மூலம் நித்யாவை கடந்த ஆண்டு வரவழைத்த வினோத் குமார் அவரை கொலை செய்துள்ளார்.

    இதனையடுத்து கிளிண்டன் வினோத்குமாருக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லப் போவதாக கூறியுள்ளார். இதனால் கடந்த மாதம் 18ம் தேதி கிளிண்டனை வினோத்குமார் தரப்பினர் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது கிளிண்டனின் நண்பரான சரத்குமார் அங்கு வந்தார். இதனால் வினோத்குமார் தரப்பினர் தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் சரத்குமாருக்கு தெரிந்து விட்டதால் அவரையும் தீர்த்து கட்ட வினோத்குமார் தரப்பினர் திட்டமிட்டு உள்ளனர்.

    அதன்படி கடந்த மாதம் 20ம் தேதி வீரராகவபுரத்தில் சரத்குமாரை வினோத்குமார், வண்டு என்கிற ராஜேஷ், கீழ் வீராணம் ராமச்சந்திரன், தாளிக்கால் முருகேசன், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் குடியிருப்பச் சேர்ந்த பில்லா என்கிற சூர்யா ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் சரத்குமாரை கொலை செய்ய முயற்சி செய்தனர்.இதில் படுகாயம் அடைந்த சரத்குமார் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    அதேபோல் கிளிண்டனும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சரத்குமாரை வெட்டிய வழக்கில் வினோத்குமார், வண்டு என்கிற ராஜேஷ் ஆகிய 2 பேரும் வாலாஜா கோர்ட்டில் சரணடைந்தனர்.

    அவர்களை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் முருகேசன் என்பவரை பாணாவரம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பில்லா என்கிற சூர்யா, கீழ்வேராணம் ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருவதும் தெரிய வந்தது.

    இந்நிலையில் சரத்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, மணிமாறன், முனிஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் ஏற்கனவே எஸ்எஸ்ஐ குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசரும் விசாரணை நடத்துகின்றனர். இந்தநிலையில் தலைமறை வாக இருந்த கீழ்வீராணம் பகுதியை சேந்ந்த ராமசந்திரன் ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீஸார் தீவிர வேட்டையில் கீழ்வீராணம் மோட்டூர் பகுதியை சேர்ந்த சரவணகுமார் (38), காஞ்சிபுரம் சேர்ந்த லூவி அரசன் (29) திருவண்ணாமலை சேர்ந்த ராஜா (34) ஆகியோரை கைது செய்து வாலாஜா கோட்டுடில் நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×