என் மலர்
நீங்கள் தேடியது "Awareness pamphlet on solid waste management"
- சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
- துண்டுபிரசுரம் விநியோகம்
அரக்ேகாணம்:
அரக்கோணம் நகராட்சியில் "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. இதில் நகராட்சி சேர்மன் லட்சுமி ஆணையாளர் லதா துணைத்தலைவர் கலாவதி கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி தொடங்குவதற்கு முன்பாக அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்தப் பேரணி பழைய பஸ் நிலையம் சென்றடைந்தது.
அப்போது பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் விழிப்புணர்வுக்கான வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.






