என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும்
    • நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் நேற்று ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் பாமக தனித்துவமான இயக்கமாக செயல் பட்டு வருகிறது.பாமக தொண்டர்கள் இப்போது உழைப்பது போல இன்னும் பலமடங்கு கூடுதலாக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

    வருகின்ற 25 -ந்தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் மரக் கன்றுகள் நட வேண்டும்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும் என்று அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சமூக நீதி பேரவை சக்கரவர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணி, நெமிலி நகர செயலாளர் சந்திரசேகர், நகர தலைவர் காளிமுத்து, ஒன்றிய செயலாளர் குணா,சுப்பிரமணி, அரிகிருஷ்ணன், நடராஜன்,பாஸ்கர், வெங்கடேசன், விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சிசிடிவி கேமராக்கள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் பகுதியில் கடந்த 2 நாட்களில் பைக்குகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

    காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டை சேரி பகுதியைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் சங்கர் நண்பருடைய இருசக்கர வாகனம் மற்றும் காவேரிப்பாக்கம் முக்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த பார்த்திபன் என்பவருடைய இருசக்கர வாகனம் மற்றும் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள முனுசாமி என்பவருடைய இருசக்கர வாகனம் ஆகிய 3 பைக்குகளை மர்ம நபர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே இரவில் திருடி சென்றுள்ளனர்.

    வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த பைக்கை காலையில் பார்த்தால் காணவில்லை. இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசில் அவர்கள் புகார் அளித்தனர். மேலும் நேற்று இரவு ஆலப்பாக்கம் வடசேரி பகுதியில் 3 பைக்குகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

    தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம ஆசாமிகளை காவேரிப்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மழையூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40).
    • ஆம்புலன்ஸ் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மழையூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவர் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராக வேலை செய்து வந்தார்.

    கலவையை சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி லாவண்யா. நிறைமாத கர்ப்பிணியான லாவண்யாவுக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பரதராமியை சேர்ந்த பாரதிதாசன் மற்றும் மருத்துவ உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் லாவண்யா, அவரது கணவர் பெருமாள், மாமியார் ரேவதியை ஏற்றிக்கொண்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    கலவை கண்ணமங்கலம் சாலையில் மேட்டுக்குடிசை என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பாரதிதாசன் வாகனத்தை திருப்பினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் மருத்துவ உதவியாளர் வெங்கடேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் பாரதிதாசன், கர்ப்பிணி பெண் லாவண்யா, அவரது கணவர் பெருமாள், மாமியார் ரேவதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கர்ப்பிணி உள்பட 3 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மழையூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவர் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராக வேலை செய்து வந்தார்.

    கலவையை சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி லாவண்யா. நிறைமாத கர்ப்பிணியான லாவண்யாவுக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பரதராமியை சேர்ந்த பாரதிதாசன் மற்றும் மருத்துவ உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் லாவண்யா, அவரது கணவர் பெருமாள், மாமியார் ரேவதியை ஏற்றிக்கொண்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    கலவை கண்ணமங்கலம் சாலையில் மேட்டுக்குடிசை என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பாரதிதாசன் வாகனத்தை திருப்பினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் மருத்துவ உதவியாளர் வெங்கடேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் பாரதிதாசன், கர்ப்பிணி பெண் லாவண்யா, அவரது கணவர் பெருமாள், மாமியார் ரேவதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு
    • கொலை வழக்கில் நடவடிக்கை

    அரக்கோணம்:

    கடந்த மே மாதம் அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் உள்ள காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியான மாணிக்கம் ராணி ஆகியோர் கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டிருந்தனர்.

    இந்த கொலை சம்பவத்தில்அரக்கோணம் கிராமிய போலீசார் திருத்தணியை சேர்ந்த தரணி (25) சந்திரன்(40) உட்பட 4 பேரை கைது செய்தனர்.

    இதில் முக்கிய முக்கிய காரணமாக இருந்த தரணி மற்றும் சந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும் இதேபோல் அரக்கோணம் தோல் ஷாப் பகுதியில் பச்சிளம் குழந்தையை வாளி தண்ணீரில் மூழ்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் அரக்கோணம் நகர போலீசார் தேன்மொழி உட்பட இருவரை கைது செய்தனர்.

    இதில் தேன்மொழியை (51) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு தீபா சத்யன் கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

    இதனையடுத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    • நண்பர்களுடன் விளையாடிகொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மதுர பிள்ளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகன் தட்சிணாமூர்த்தி (வயது 13)அரக்கோணம் எஸ் ஆர் கேட் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள கிணற்றில் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தட்சிணா மூர்த்தி கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

    இதனையடுத்து அவருடைய நண்பர்கள் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரில் விழுந்த மாணவனை மீட்க கிணற்றுக்குள் குதித்தனர். அதற்குள் தட்சிணாமூர்த்தி தண்ணீரில் மூழ்கினார். பின்னர் அவரை பிணமாக மீட்டு அவரது உடலை மேலே கொண்டு வந்தனர்.

    இது குறித்து அரக்கோணம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், தெருவை சேர்ந்தவர் மகன் சின்ராஜ் (வயது 52). இவர் பனப் பாக்கத்தில் உள்ள அடகு கடையில் கடந்த 15 வருடங்களாக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு காவேரிப்பாக்கம் நோக்கி சென்றுள்ளார். அப்போது மேலபுலம் கிராமம் அருகே செல்லும் போது அவரின் பின்னால் பைக்கில் வந்த மர்ம கும்பல் 3 பேர் சின்ராஜை மடக்கி கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

    காயமடைந்த அவரிடம் இருந்து 10 ஆயிரம் பணத்தையும், செல்போனையும் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து சின்ராஜ் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    தொடர் வழிபறி

    கடந்த சில மாதங்களாக பனப்பாக்கம், நெமிலி, ஓச்சேரி, ஆயர்பாடி, காவேரிப்பாக்கம், அவளூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் வழிப் பறி, பைக் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதனால் இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு அந்த வழியக வரும் தொழிலாளர்கள் ஒருவித அச்சத்துடனே கடந்து வருகின்றனர். உடனடியாக இரவு நேரங்களில் போலீசார் இந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர்
    • உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு

    அரக்கோணம்:

    அரக்கோணம் சுவால்பேட்டையில் அமைந்துள்ள ராமர் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலன் பெற உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.

    வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த துணைத் தலைவர் கதிரவன் தலைமையில் தலைவர் டீட்டா சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    முதல்-அமைச்சர் உடல்நலம் பெற்று பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜை செய்தனர்.

    பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் உதயநிதி ரசிகர் நற்பணி மன்றத்தினர் பிரசாதம் வழங்கினர்.

    இதில் துணைச் செயலாளர் வினோத், தெய்வா, ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஸ்ரீராம், அருண், மதன், விக்கி, சையத், ஏமந்த் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • தலைமறைவாக உள்ளவரை தேடும் பணி தீவிரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் எட்வின். ரெயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். இவரது இளைய மகன் இமானுவேல்(வயது 23). காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    அரக்கோணத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று திரும்பவில்லை இமானுவேல் மர்ம நபர் ஒருவர் வெட்டிக் கொன்றார்.

    இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எஸ்.பி. தீபா சத்யன் உத்தரவின் பேரில் தனிப்பட அமைத்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இமானுவேலின் நண்பர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர் பிடிப்பட்டால் கொலையாளி யார் என்பதும் எதற்காக கொலை செய்தார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • கலவை அடுத்த மழையூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்.
    • ராணிபேட்டை டி.எஸ்.பி. பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மழையூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 36). விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரான இவர் ராணிப்பேட்டை நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ் கர்ணாவின் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து செய்யாத்து வன்னான் சுடுகாடு அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் பார்த்திபனை கை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கலவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ராணிபேட்டை டி.எஸ்.பி. பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

    விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர். கொலை செய்யப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

    • சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு சுவால்பேட்டை பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் நகரச் செயலாளர் வி. ரவிச்சந்திரன், தலைமையில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் ஹரிதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன் காந்தி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    மாவட்ட செயலாளர் எம். யமுனா, நெமிலி ஒன்றிய செயலாளர் ரவி, அரக்கோணம் ஒன்றிய தலைவர் தேவேந்திரன், நகரத் துணைத் தலைவர் சுபாஷ், ஒன்றிய பொதுச் செயலாளர் உத்தமன், நகர செயலாளர் கே.கஜேந்திரன், நகர பொருளாளர் முனுசாமி, ஒன்றிய துணைத் தலைவர் கஜேந்திரன், ஒன்றிய சிறப்பு அமைப்பாளர் புருஷோத்தமன் பலர் உடன் இருந்தனர்.

    இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பேச்சாளர் பாலகிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.

    • 2 தொழிலாளர்களுக்கு தீக்காயம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் , சிப்காட் பெல் அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் , நேற்று முன்தினம் தொழிலாளர்கள் கட்டிங் மிஷின் மூலம் வேலை செய்து கொண்டி ருந்தனர் . அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த கத்தாரிகுப்பம் பகுதியை சேர்ந்த நேதாஜி ( வயது 50 ) , செங்கல்நத்தம் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் ( 37 ) ஆகிய 2 பேரும் தீக்காயம் அடைந்தனர் . உடனடியாக அவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் . இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    ×