என் மலர்
நீங்கள் தேடியது "Saplings should be planted in villages across the district"
- வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும்
- நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் நேற்று ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் பாமக தனித்துவமான இயக்கமாக செயல் பட்டு வருகிறது.பாமக தொண்டர்கள் இப்போது உழைப்பது போல இன்னும் பலமடங்கு கூடுதலாக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
வருகின்ற 25 -ந்தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் மரக் கன்றுகள் நட வேண்டும்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும் என்று அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சமூக நீதி பேரவை சக்கரவர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணி, நெமிலி நகர செயலாளர் சந்திரசேகர், நகர தலைவர் காளிமுத்து, ஒன்றிய செயலாளர் குணா,சுப்பிரமணி, அரிகிருஷ்ணன், நடராஜன்,பாஸ்கர், வெங்கடேசன், விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






