என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்புலன்ஸ் மரத்தில் மோதியது"

    • கர்ப்பிணி உள்பட 3 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மழையூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவர் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராக வேலை செய்து வந்தார்.

    கலவையை சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி லாவண்யா. நிறைமாத கர்ப்பிணியான லாவண்யாவுக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பரதராமியை சேர்ந்த பாரதிதாசன் மற்றும் மருத்துவ உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் லாவண்யா, அவரது கணவர் பெருமாள், மாமியார் ரேவதியை ஏற்றிக்கொண்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    கலவை கண்ணமங்கலம் சாலையில் மேட்டுக்குடிசை என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பாரதிதாசன் வாகனத்தை திருப்பினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் மருத்துவ உதவியாளர் வெங்கடேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் பாரதிதாசன், கர்ப்பிணி பெண் லாவண்யா, அவரது கணவர் பெருமாள், மாமியார் ரேவதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×