என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பொதுமக்கள் ஏராளமானோர் இறுதி அஞ்சலி
    • 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மபாரதி. நெமிலி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து பணிக்கு கிளம்பிய போது அவருக்கு மாரடைப்பு ஏற் பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து அவரை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் 17 - ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து 21 குண்டு முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது . இதில் அரக்கோ ணம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் , காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    இறந்த தலைமை காவலர் நரசிம்ம பாரதிக்கு சோனி என்ற மனைவியும், கவிபாரதி, நித்யபாரதி என்ற மகன்களும், திவ்ய பாரதி என்ற மகளும் உள்ளனர். 

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த லாடா வரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் குமரேசன் விற்பனை மேலாளர் ஆகவும், மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை விற்பனையாளராகவும் வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்த வழியாக ஆற்காடு தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். டாஸ்மாக் கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டு போலீசார் ஏழுமலைக்கு தகவல் கூறியுள்ளனர்.

    அப்போது ஏழுமலை கடையில் உள்ளே சென்று பார்த்த போது ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மர்ம கும்பல் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து ஏழுமலை ஆற்காடு தாலுக்கா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து

    கடையில் மது பாட்டில்களை கொள்ளை அடித்துச் சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

    • நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில், நடத்தையில் சந்தேகம் அடைந்து, மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    ராணிப்பேட்டை நவல்பூர் தியாகி மாணிக்க நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சுலைமான் (வயது 35). அவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி மும்தாஜ் (38). இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 17 ஆண்டுகள் ஆகிறது. 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்தநிலையில் மனைவி மும்தாஜ் நடத்தையின் மீது சுலைமானுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து நேற்று இருவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுலைமான் ஷூ லேசால் மும்தாஜின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது குறித்து மும்தாஜின் தம்பி ஆசிம் ராணிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் நடந்தது
    • குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்

    ராணிப்பேட்டை:

    வேலூர் மின் பகிர்மான வட் டம் , ராணிப்பேட்டைகோட் டத்தில் ஒவ்வொரு மாதமும் 3 - வது செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறை தீர்வு நாள் கூட்டம் நடத்தப்படு கிறது .

    இம்மாதத்திற்கான கூட் டம் இன்று ( செவ்வாய்க்கி ழமை ) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் , வேலூர் மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளரால் நடத்தப்படுகிறது.

    இதில் மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரி வித்து நிவர்த்தி செய்து கொள் ளலாம் .

    இந்த தகவலை செயற்பொ றியாளர் குமரேசன் தெரிவித் துள்ளார் .

    • ராணிப்பேட்டை கலெக்டர் பேச்சு
    • ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை :

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28.7. 2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ள 44 வது உலக செஸ் போட்டி நடைபெறுகிறது.

    இதையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் தோறும் சதுரங்க செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றிய முகுந்தராயபுரம் மற்றும் வாணாபாடி ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தலைமை தாங்கி மகளிர் குழுக்களுடன் இணைந்து மாணவ மாணவர்களுடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-

    சதுரங்கப் போட்டி என்பது இந்தியாவில் தோன்றியது. மன்னர் ஆட்சி காலத்தில் தோன்றி சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னரே இப்போட்டி மன்னர்களிடையே நடைபெற்று வந்தது. அரசர்கள் எவ்வாறு போர் புரிய வேண்டும் எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்து மனதிற்கும் உடலுக்கும் ஊக்கத்தை கொடுக்கக்கூடிய போட்டியாக நடைபெற்றுள்ளது. பின்னர் மற்ற உலக நாடுகளுக்கும் பரவி அனைத்து நாடுகளிலும் இப்போட்டி நடைபெற்று வருகிறது. எவ்வாறு திட்டமிடுதல், எவ்வாறு தற்காத்துக் கொள்ளுதல், வெற்றியை தடைகளை தாண்டி எப்படி பெறுவது குறித்து மனதிற்கும் மூளைக்கும் ஆராய்ந்து செயல்படக்கூடிய ஒரு விளையாட்டு போட்டியாக சதுரங்க விளையாட்டு விளங்குகிறது.இதை மாணவர்களுக்கும் பொதுமக்களும் என அனைவரும் விளையாடும் வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்ற சிந்தனை பாங்கு உயர்வடையும் மூளையின் நரம்புகள் சுறுசுறுப்பு அடைய செய்யும், மனவலிமை அறிவாற்றல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விளையாட்டு இருக்கின்றது. இப்போட்டியில் அனைவரும் பங்கு பெற்று தன்னுடைய அறிவாற்றலை பெருக்கும் வகையில் தமிழக அரசு அனைத்துக் பள்ளிகளிலும் சதுரங்க போட்டிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மாணவ மாணவிகள் இதை பயன்படுத்தி நன்கு சதுரங்க விளையாட்டை விளையாட வேண்டும்.

    செஸ் போட்டியானது நமது தமிழகத்தில் நடைபெற உள்ளது. அதனை மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு அடையும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், ஊராட்சி உதவி இயக்குனர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன், உதவி திட்ட அலுவலர்கள் ஷாகூல் ஷமீத், சுபாஷ் சந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சிமன்ற தலைவர்கள் முருகன், ஈஸ்வரி, மகளிர் சுய உதவி குழு பெண்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மேலும் 2 பேரிடம் விசாரணை
    • தனிப்படை தீவிரம்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மழையூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. விடுதலை சிறுத்தை கட்சியின் ஆற்காடு தொகுதி இளைஞர் எழுச்சி பாசறை செயலாளராக இருந்து வந்தார்.

    இவருக்கும் மழையூர் ரோட்டு தெருவை சேர்ந்த ராஜேஷுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பார்த்தசாரதியை தீர்த்துக்கட்ட ராஜேஷ் முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று பார்த்த சாரதியை கும்பல் ஒன்று பின் தொடர்ந்து சென்று வெட்டி கொலை செய்தனர். இது குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த கொலையில் ஈடுபட்ட ஆனந்தன், ரவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்‌.

    இந்த நிலையில் ஆற்காடு உரிமையியல், குற்றவியல் கோர்ட்டில் ராஜேஷ் (வயது 37), சதீஷ்குமார் (20) ஆகியோர் சரண் அடைந்தனர். மேலும் சென்னையில் இருந்து 2 பேரை பிடித்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீர் உடல் நிலைகுறைவால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    கவுஹாத்தியிலிருந்து அரக்கோணம் வழியாக பெங்களூர் செல்லும் விரைவு ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜியாவுல் ஹாக் (வயது 41) பயணம் செய்தார்.

    இன்று காலை அரக்கோணம் அருகே ரெயில் வந்த போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    ரெயில் அரக்கோணம் வந்ததும் அவருக்கு பரிசோதனை செய்தனர். இதில் ஜியாவுல்ஹாக் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

    போலீசார் உடலை கைப்பற்றி அரக்கோணம் அரசு மரு த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்
    • 280 மனுக்கள் பெறப்பட்டது

    ராணிப்பேட்டை :

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்.

    கூட்டத்தில் வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மை துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மருத்துவத்துறை, கிராம பொது பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநல மனுக்கள் என 280 மனுக்கள் பெறப்பட்டது.

    அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு உடனடியாக தெரிவித்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.கூட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் கடன் வழங்கும் திட்டத்தில் 65 பெண்களுக்கு ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் கடன் உதவிக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், துணை ஆட்சியர்கள் சேகர், தாரகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள் சாகுல் ஹமீத், சுபாஷ் சந்திரன், பெர்லீனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    ஆற்காடு:

    ரத்தி னகிரி பாலமுருகன் கோவில் வளாகத்தில் உள்ள மகா கண பதி கோவிலில் கும்பாபிஷே கத்தையொட்டி நடைபெற்று வந்த மண்டலாபிஷேகம் நேற்று நிறைவடைந்தது.

    விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை பால முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னி லையில், உச்சிஷ்ட கணபதி ஜெபம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகர் பூஜை, தன பூஜை, கோ பூஜை, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் மகா கணபதி. 1,008 ஆஹூதிகள் மகா பூர்ணாஹுதி, யத்ரா தானம், கடம் புறப்பாடு, கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தொழிலதிபர் நல்லு சாமி, உபயதாரர்கள் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • தூங்கிக் கொண்டிருந்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த கிழவனம் அருகே உள்ள முத்துக் குமரன் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண் டிருந்தார்.

    அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. உடன டியாக அவரை அக்கம்பக்கத்தினர் காமாட்சியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக் காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக உயிரி ழந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முக்கிய குற்றவாளியை பிடிக்க தீவிரம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மழையூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி. விடுதலை சிறுத்தை கட்சியின் ஆற்காடு தொகுதி இளைஞர் எழுச்சி பாசறை செயலாளராக இருந்தார்.

    இவர் நேற்று காலை செய்யாத்து வண்ணான் சுடுகாடு அருகே வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மழையூர் ரோட்டு தெருவை சேர்ந்த ராஜேஷ்( 37), ஆனந்தன் (70), ரவி (35) ஆகியோர் பார்த்தசாரதியை கொலை செய்தது தெரியவந்தது. கொலை சம்பந்தமாக ஆனந்தன், ரவி ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பார்த்தசாரதி ராஜேஷ் இருவரும் விடுதலை சிறுத்தை கட்சியில் பதவி இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இதில் பார்த்தசாரதி தனது செல்வாக்கை பயன்படுத்தி ஆற்காடு தொகுதி இளைஞர் எழுச்சி பாசறை செயலாளர் பதவி வாங்கி உள்ளார். இதனால் பார்த்தசாரதிக்கும், ராஜேஷுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இதனால் பார்த்த சாரதியை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ராஜேஷ் நேற்று காலை இயற்கை உபாதை கழிக்க சென்ற பார்த்தசாரதியை பின் தொடர்ந்து சென்று வெட்டி கொலை செய்ததாக கொலையாளிகள் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான ராஜேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

    • போலீசில் தாய் புகார்
    • மருத்துவ முகாம் நடத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து.விவசாய கூலிவேலை செய்து வருகிறார்.

    இவரது குழந்தை யோகஸ்ரீ (வயது3). இந்நிலையில் நேற்று காலை குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.இதனால் பதறிப்போன குழந்தையின் பெற்றோர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.இதுகுறித்து குழந்தையின் தாய் கங்கா காவேரிப்பாக்கம் போலீஸ் புகார் செய்தார்.

    சப் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மர்ம காய்ச்சலால் குழந்தை இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை இறந்ததால் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தி மேலும் மர்ம பாய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×