என் மலர்
நீங்கள் தேடியது "Passenger died suddenly"
- திடீர் உடல் நிலைகுறைவால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
கவுஹாத்தியிலிருந்து அரக்கோணம் வழியாக பெங்களூர் செல்லும் விரைவு ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜியாவுல் ஹாக் (வயது 41) பயணம் செய்தார்.
இன்று காலை அரக்கோணம் அருகே ரெயில் வந்த போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
ரெயில் அரக்கோணம் வந்ததும் அவருக்கு பரிசோதனை செய்தனர். இதில் ஜியாவுல்ஹாக் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
போலீசார் உடலை கைப்பற்றி அரக்கோணம் அரசு மரு த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






