என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த லாடா வரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் குமரேசன் விற்பனை மேலாளர் ஆகவும், மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை விற்பனையாளராகவும் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்த வழியாக ஆற்காடு தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். டாஸ்மாக் கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டு போலீசார் ஏழுமலைக்கு தகவல் கூறியுள்ளனர்.
அப்போது ஏழுமலை கடையில் உள்ளே சென்று பார்த்த போது ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மர்ம கும்பல் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து ஏழுமலை ஆற்காடு தாலுக்கா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து
கடையில் மது பாட்டில்களை கொள்ளை அடித்துச் சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.
Next Story






