என் மலர்
நீங்கள் தேடியது "Worker strangled"
- நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில், நடத்தையில் சந்தேகம் அடைந்து, மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை நவல்பூர் தியாகி மாணிக்க நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சுலைமான் (வயது 35). அவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி மும்தாஜ் (38). இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 17 ஆண்டுகள் ஆகிறது. 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் மனைவி மும்தாஜ் நடத்தையின் மீது சுலைமானுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து நேற்று இருவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுலைமான் ஷூ லேசால் மும்தாஜின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது குறித்து மும்தாஜின் தம்பி ஆசிம் ராணிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






