என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனையை தடுக்க தனி குழு அமைப்பு
- குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை
- போலீசார் எச்சரிக்கை
அரக்கோணம்:
அரக்கோணம் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதால் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன் உத்தரவின் பேரில் அரக்கோணம் கலால் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
அரக்கோணம் சுற்றி உள்ள பகுதிகளில் கல்லூரி பள்ளி மாணவர்களை குறி வைத்து சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் வருவதால் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் கஞ்சாவிற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் தயக்கம் காட்டக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரக்கோணம் பகுதிகளில் கஞ்சா விற்பனை தடுப்பதற்கான பெரும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருவதால் இந்தப் பகுதிகளில் கஞ்சா விற்பனை இனி இருக்காது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.






