என் மலர்
நீங்கள் தேடியது "Basic facilities for children"
- அங்கன்வாடி மையத்தில் சத்துணவை தரமாக தயாரிக்க உத்தரவு
- அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் குட்டியம் ஊராட்சியில் 100 நாள் வேலை பணியாளர்களைக்கொண்டு பண்ணை குட்டை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது .
இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் சென்னசமுத்திரம் ஊராட்சியில் உள்ள அங் கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து இதைவிட நன்றாக உணவு சமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அப்போது திட்ட இயக்குனர் லோகநாயகி, தாசில்தார் ஷமீம் உள்பட பலர் உடன் இருந்தனர்.






