என் மலர்
நீங்கள் தேடியது "The solid waste is taken to the management center"
- குப்பைகளை அரைத்து இயற்கை உரமாக தயாரிப்பு
- மக்கும், மக்காத குப்பைகள் வாரியாக பிரிப்பு
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்கு உட் பட்ட 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து ஜெயம் நகரில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அங்கு மக்கும் குப்பைகளை அரைத்து இயற்கை உரமாக தயாரிக்கப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் நேற்று ஆற்காடு நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில் துப்புரவு அலுவலர் பாஸ்கர், துப் புரவு ஆய்வாளர் முருகன், தூய்மை பாரத இயக்க பரப்புரை யாளர் மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர் பிரேம்நாத் ஆகியோர் முன்னிலையில் ஆற்காட்டை சேர்ந்த விஜயன் என்பவருக்கு ஒரு கிலோ உரம் ரூ .2 வீதம் ஆயிரம் கிலோ விற் பனை செய்யப்பட்டது .






